மொபைல் போன் அழைப்பு கட்டணங்களை அதிகரிக்க தனியார் தொலைதொடர்பு நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.
ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டு மறு ஏலம் தொடர்ந்து 10 நாட்களாக நடந்தது. ரிலையன்ஸ், ஏர்டெல், வோடாபோன், ஐடியா ஆகிய நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு ஏலம் எடுத்தன.
அரசுக்கு மொத்தம் ரூ.61,162 கோடி வருவாய் கிடைத்தது. இதுகுறித்து தனியார் தொலைதொடர்பு நிறுவன முதன்மை செயல் அதிகாரி ஒருவர் கூறுகை யில், ‘ஏலத்தில் பெருமளவு தொகை சென்றதாலும், நிறுவன வருவாய் வளர்ச்சியை கருத்தில் கொண்டு பல நடவடிக்கைகள் எடுக்க வேண்டியுள்ளது.
அதன் ஒரு பகுதியாக, மொபைல் போன் கட்டணத்தை உயர்த்துவதை தவிர வேறு வழியில்லை‘ என்றார்.
0 comments:
Post a Comment