Tuesday 18 February 2014

பெண் தன் வாழ்நாளில் வெறும் 100 சிகரெட் புகைத்தாலே - மார்பக புற்றுநோய்...



ஒரு பெண் தன் வாழ்நாளில் வெறும் 100 சிகரெட் புகைத்தாலே போதும், மார்பக புற்றுநோய் வர வாய்ப்பு இருப்பதாக அமெரிக்காவில் உள்ள ஆராய்ச்சி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் Fred Hutchinson Cancer Research Centre என்ற ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் Dr Christopher Li, தலைமையில் ‘பெண்கள் சிகரெட் புகைப்பதால் ஏற்படும் தீமைகள் குறித்து ஆராய்ச்சி நடத்தப்பட்டு வந்தது.

இவர்கள் கடந்த 2004 முதல் 2010 ஆம் ஆண்டு வரை மார்பக புற்றுநோய் பாதித்த பெண்களிடம் நடத்திய ஆராய்ச்சியில், இவர்கள் அனைவரும் புகைபிடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் என்பது தெரியவந்தது.

ஆயினும் இவர்களில் பலர் செயின் ஸ்மோக்கர்கள் அல்ல. தங்கள் வாழ்நாளில் ஏதாவது ஒரு சமயத்தில்தான் புகைபிடிப்பவர்கள் என்பது தெரியவந்தது.

நேற்று இந்த ஆராய்ச்சிக்குழு தனது அறிக்கையை சமர்ப்பித்தது. அதில் பெண்கள் தங்கள் வாழ்நாளில் வெறும் 100 சிகரெட் புகைத்தாலே மார்பக புற்றுநோய் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருக்கின்றது என்றும், அதுமட்டுமின்றி புகைப்பவர்கள் அருகில் அதிக காலம் இருந்தாலும் இந்த நோய் தாக்ககூடும் என்றும் எச்சரித்துள்ளனர்.

778 புகைபிடிக்கும் பெண்களிடம் இவர்கள் செய்த ஆராய்ச்சியில் 182 பெண்களுக்கு மார்பக புற்றுநோய் தாக்கியிருப்பது தெரிய வந்துள்ளது. மேலும் 227 பெண்களில் ஒருவருக்கு 40 வயதுக்கு முன்பே மார்பக புற்றுநோய் தாக்குகிறது என்றும் கண்டுபிடித்துள்ளனர்.

0 comments:

Post a Comment