Tuesday, 18 February 2014

விஜய்க்கும் அவர் தந்தைக்கும் மோதலால் எடுக்கப்பட்ட அதிரடி முடிவுகள்...!



நடிகர் விஜய்க்கும் அவர் தந்தை எஸ்ஏ சந்திரசேகரனுக்கும் மோதல் முற்றியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இதன் விளைவாக, ரசிகர் மன்ற நிர்வாகிகளை தன் நீலாங்கரை வீட்டுக்கு அழைத்து ஆலோசனை நடத்திய விஜய், இனி மன்றம் குறித்து தன் தந்தை எஸ்ஏசியிடம் யாரும் கலந்தாலோசிக்கத் தேவையில்லை என்று கறாராகக் கூறிவிட்டாராம்.

 இனி எங்கப்பா படத்தை போட்டு கிங்மேக்கர்னெல்லாம் எழுதக்கூடாது.. புரிஞ்சுதா?

 விஜய் கஷ்டப்பட்டு சினிமாவில் பெரிய இடத்தைப் பெற்றுள்ள விஜய்யை அரசியலில் பெரிய ஆளாக ஆக்க வேண்டும் என்பது அவர் தந்தை எஸ் ஏ சியின் கனவு.

 அதற்காக மெல்ல மெல்ல காய் நகர்த்தி வந்த அவருக்கு பெரும் அடியாக விழுந்தது தலைவா விவகாரத்தில் தமிழக முதல்வரின் நிலைப்பாடு.

அரசியல் பற்றிய பேச்சை எடுப்பதையே தவிர்க்க ஆரம்பித்துள்ளார் விஜய். தலைவாவுக்குப் பிறகு விஜய்யின் சினிமா மற்றும் ரசிகர் மன்ற நடிவடிக்கைகள் அனைத்திலும் ஒதுங்கியே நிற்கிறார் எஸ் ஏ சந்திரசேகர்.

இந்த நிலையில் சமீபத்தில் 15 மாவட்ட ரசிகர் மன்ற நிர்வாகிகளை தனது நீலாங்கரை இல்லத்துக்கு அழைத்த விஜய், 'இனி மன்றத்தின் பேனர்கள், போஸ்டர்களில் எஸ்ஏசி பெயரை, படத்தைப் போடக்கூடாது..

குறிப்பாக கிங்மேக்கர் என்றெல்லாம் எழுதக்கூடாது' என்று உத்தரவிட்டுள்ளாராம். வழக்கமாக இதுபோன்ற கூட்டங்கள், விஜய்யின் வடபழனி கல்யாண மண்டபத்தில்தான் நடக்கும்.

ஆனால் இனி அங்கு யாரும் போக வேண்டாம்... நீலாங்கரை வீட்டுக்கே வந்துவிடுங்கள் என்று விஜய் கூறிவிட்டாராம்.

தந்தையும் மகனும் இப்படி மோதிக் கொள்ளக் காரணம் என்று மன்றத்தின் செயலாளரான புஸ்ஸி ஆனந்தைக் குறிப்பிடுகிறார்கள்.

இவர் புதுவை மாநில புஸ்ஸி தொகுதியின் முன்னாள் எம்எல்ஏ. அவரோ, இந்த விவகாரத்தில் அனைத்து முடிவுகளையுமே விஜய்தான் எடுத்தார்.

ஒருவேளை அவர் தன் தந்தையுடன் கலந்து பேசிக்கூட இப்படியொரு முடிவை எடுத்திருக்கலாம், என்கிறார் ஒரேயடியாக‍!

0 comments:

Post a Comment