Wednesday 19 February 2014

விஜயகாந்த் நடிக்காதது திரைப்படத்துறைக்கு இழப்பு - கமல்..!



திரைப்பட கல்லூரி மாணவர்கள் பலர் இணைந்து பணிபுரிந்துள்ள படம், ‘மறுமுகம்.’ இந்த படத்தின் பத்திரிகை மற்றும் ஊடகங்கள் சந்திப்பில் கலந்துகொண்டு அதன் டைரக்டர் கமல் சுப்பிரமணியம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–

‘‘இந்த படம் திரைப்பட கல்லூரி மாணவர்களின் படம் என்று பெருமையாக சொல்வேன். நண்பர்கள் இணைந்து நட்புடன் இதை உருவாக்கியிருக்கிறோம். எங்கள் நண்பர் திரைப்பட கல்லூரியின் மூத்த மாணவர் டேனியல் பாலாஜி முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

அனூப், ஷில்பி, கிஷி ஆகியோரும் நடித்து இருக்கிறார்கள். சஞ்சய் டாங்கி தயாரித்து இருக்கிறார். பொதுவாக, திரைப்பட கல்லூரி மாணவர்கள் முதலில் கதை சொல்ல செல்வது, விஜயகாந்திடம்தான். திரைப்பட கல்லூரி மாணவர்கள் எல்லோருடைய முதல் கனவும் அதுவாகவே இருந்தது.

கல்லூரியில் இருந்து வெளியே வந்ததும் செல்லும் இடம், விஜயகாந்தின் அலுவலகமாகத்தான் இருக்கும். திரைப்பட கல்லூரி மாணவர்கள் பலரையும் டைரக்டர் ஆக்கியவர், அவர்தான். நான் ஒரு படத்தை இயக்க தயாராக இருந்தபோது, அவர் அரசியல் என்று வேறு உலகத்தில் இருக்கிறார்.

அவர் இப்போது நடிக்காதது, திரைப்பட கல்லூரி மாணவர்களுக்கு இழப்புதான். ‘மறுமுகம்’ என்றால் என்ன? என்று கேட்டார்கள். எல்லோரிடமும் பல முகங்கள் உண்டு. சூழலுக்கு ஏற்றபடி அவரவரின் நல்ல முகமோ, கெட்ட முகமோ வெளிப்படுகிறது. அப்படி வெளிப்படும் ஒருவனது மறுமுகம்தான், இந்த படம்.’’

இவ்வாறு டைரக்டர் கமல் சுப்பிரமணியம் பேசினார்.

படத்தை வெளியிடும் வினியோகஸ்தர் என்.விஸ்வாமித்திரன், கதாநாயகி பிரீத்திதாஸ், ஷில்பியோ, யாஸ்மின், கிஷி, ஒளிப்பதிவாளர் கனகராஜ், இசையமைப்பாளர் பிரவீன் சாய் ஆகியோரும் பேசினார்கள்.

0 comments:

Post a Comment