முதலில் லேப்டாப் மற்றும் டேப்ளட் பி.சிக்கும் இடையே உள்ள வேறுபாட்டினைக் காணலாம். லேப்டாப் பி.சி. அல்லது நோட்புக் கம்ப்யூட்டர் என்பது, கையில் எடுத்துச் சென்று பயன்படுத்தக் கூடிய முழுமையான பெர்சனல் கம்ப்யூட்டரின் செயல்பாடுகளைத் தரக்கூடிய சாதனமாகும். இதில் பெர்சனல் கம்ப்யூட்டர் மட்டுமின்றி, மேக் கம்ப்யூட்டர் வகையும் உண்டு. விண்டோஸ் மற்றும் ஓ.எஸ். ஆப்பரேட்டிங் சிஸ்டங்களை, இவை முழுமையாக இயக்கும். இவற்றை இணை யத்துடன் இணைத்தோ, இணைக்காமலோ இயக்கலாம். இவற்றில் டச் ஸ்கிரீன் இயக்கம் இருக்கலாம். இல்லாமலும் இவை செயல்படும்.
நெட்புக் என்பது விண்டோஸ் இயக்கத்தில் இயங்கும் ஒரு சிறிய சாதனம். இதில் இணைய இணைப்பு பெற்று இயக்க ஒரு கீபோர்ட் இணைந்தே கிடைக்கும். குரோம்புக் (Chromebook) என்பது கூகுள் குரோம் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினைப் பயன்படுத்தி, இணைய இணைப்பினைப் பெற்று செயல்படுத்தும் சிஸ்டம் ஆகும். இது கூகுள் தளத்திலிருந்து கிடைக்கும் அப்ளிகேஷன்களைக் கொண்டே பெரும்பாலும் செயல்படுவதால், இணைய இணைப்பில் இருந்தால் தான், முழுமையான இயக்கமும் பயனும் கிடைக்கும்.
குரோம் புக்கிலும் கீ போர்ட் ஒன்று இணைக்கப்பட்டே கிடைக்கும்.
டேப்ளட் பி.சி. என்பது டச் ஸ்கிரீன் கொண்ட ஒரு சாதனமாகும். இதில் கீ போர்டை இணைத்துச் செயல்படுத்த வசதி தரப்பட் டுள்ளது. டேப்ளட் பி.சி.க்கான பிரபலமான ஆப்பரேட்டிங் சிஸ்டங்களாக ஆண்ட்ராய்ட் மற்றும் ஐ.ஓ.எஸ். சிஸ்டங்களைக் கூறலாம். நெக்சஸ், கிண்டில் பயர் மற்றும் நூக் கலர் (Nexus, Kindle Fire and Nook Color) ஆகிய வற்றை, பலவகையான ஆண்ட்ராய்ட் டேப்ளட்களாகக் காணலாம்.
நீங்கள் ஓர் ஆண்ட்ராய்ட் டேப்ளட்டினைப் பயன்படுத்துகையில், இதற்கான அப்ளி கேஷன்கள் அல்லது புரோகிராம்களை கூகுள் ப்ளே ஸ்டோரில் காணலாம். கிண்டில் மற்றும் நூக் ஆகியவை, இவற்றிற்கென வடிவமைக்கப் பட்ட ஆண்ட்ராய்ட் சிஸ்டங்களில் இயங்கு கின்றன.
இவற்றில் இயங்கும் வகையில், அப்ளிகேஷன்கள், நூல்கள், இசை மற்றும் வீடியோ கோப்புகள் முறையே அமேஸான் மற்றும் பார்னஸ் அண்ட் நோபிள் ஸ்டோர் தளங்களில் கிடைக்கின்றன. டேப்ளட் இணைய இணைப்பில் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பல வகைகளில் பார்த்தால், இது ஒரு வை-பி இயக்க சாதனமாகும். உங்களால், ஒரு வை-பி இணைப்பு, அல்லது 3ஜி அல்லது 4ஜி இணைப்பினைப் பெற முடியாது என்றால், டேப்ளட் பயன்படுத்தும் எண்ணத் தினை விட்டுவிடலாம்.
ஐபேட் சாதனம் ஆப்பிள் நிறுவனத்தின் ஐ.ஓ.எஸ். ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்குகிறது. இதற்கான ஆடியோ, விடியோ மற்றும் புத்தகங்களுக்கான பைல் களை, ஆப்பிள் நிறுவனத் தின் ஐ-ட்யூன் ஸ்டோரில் பெறலாம்.
ஐபேட் ஏர் என்பது, அண்மைக் காலத்தில் வெளி வந்த சாதனமாகும். இது எடை குறைவாகவும், இயக்க வேகம் விரைவாகவும் கொண்டது. ஆண்ட்ராய்ட் டேப்ளட் போல, இதனுடனும் கீ போர்ட் ஒன்றை இணைத்துப் பயன்படுத்தலாம். டேப்ளட் பி.சி.க்களின் வரிசையில், அதிக விலையுள்ளவை ஐபேட் சாதனங் களாகும்.
மைக்ரோசாப்ட் நிறுவனமும் விண்டோஸ் ஆர்.டி. என்ற பெயரில் டேப்ளட் பி.சி.க்களை வழங்குகின்றன. இவை விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்குகின்றன. விண்டோஸ் இயக்கத்தில் இயங்கும் புரோகிராம்களை ஆண்ட்ராய்ட், ஐ.ஓ.எஸ் மற்றும் கு@ராம் புக் ஆகிய வற்றில் இயக்க முடியாது. ஆனால், விண்டோஸ் ஆர்.டி.யில் இயக்கலாம். டேப்ளட் மற்றும் லேப்டாப்களுக்கு இடையேயான சாதனமாக இது கருதப்படுகிறது. விண்டோஸ் ஆர்.டி. மற்றும் விண்டோஸ் டேப்ளட்கள் வித்தியாசங்கள் அதிகம் கொண்டவை. ஆர்.டி. விண்டோஸ் அப்ளிகேஷன் ஸ்டோரில் கிடைக்கும் அப்ளிகேஷன்களைப் பயன்படுத்துகிறது. ஆனால், விண்டோஸ் புரோகிராம்களை முழுமையாகப் பயன்படுத்த முடியாது. ஆபீஸ், போட்டோ ஷாப் அல்லது இது போன்ற விண்டோஸ் புரோகிராமின் முழு பதிப்பும் பயன்படுத்த வேண்டும் என்றால் உங்களிடம் விண்டோஸ் 8.1ல் இயங்கும் டேப்ளட் தேவை.
சூப்பர்..
ReplyDelete