சென்னை, சவுகார்பேட்டையை சேர்ந்தவர் பைனான்சியர் ககன்போத்ரா. இவர், சென்னை ஜார்ஜ் டவுன் 8–வது குற்றவியல் கோர்ட்டில், தாக்கல் செய்துள்ள 2 செக் மோசடி வழக்குகளில் கூறியிருப்பதாவது:–
நடிகை புவனேஸ்வரி என்ற அனு, அவரது தாயார் சம்பூரணம் ஆகியோர் என்னிடம் ரூ.85 லட்சம் கடன் வாங்கினார்கள். இந்த தொகையை காசோலைகள் மூலம் இருவரும் திருப்பிக்கொடுத்தனர். இந்த காசோலைகளை வங்கியில் செலுத்தியபோது, புவனேஸ்வரி, சம்பூரணம் ஆகியோரது வங்கி கணக்குகளில் பணம் இல்லை என்று திரும்பி வந்தது. எனவே அவர்கள் 2 பேரும் வேண்டுமென்றே, தங்கள் வங்கி கணக்குகளில் பணம் இல்லை என்று தெரிந்தும், இந்த காசோலைகளை கொடுத்துள்ளனர். எனவே அவர்கள் மீது செக் மோசடி சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து தண்டிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.
இந்த வழக்குகளை மாஜிஸ்திரேட்டு ஜெயந்தி விசாரித்து, விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி புவனேஸ்வரி, சம்பூரணம் ஆகியோருக்கு சம்மன் அனுப்ப உத்தரவிட்டார். இந்த வழக்கு கடந்த 11–ந் தேதி விசாரணைக்கு வந்தபோது, இருவரும் ஆஜராகவில்லை. இதையடுத்து, வழக்கு விசாரணையை வருகிற 17–ந் தேதிக்கு தள்ளிவைத்து மாஜிஸ்திரேட்டு ஜெயந்தி உத்தரவிட்டார். நடிகை புவனேஸ்வரி ‘சூப்பர்டா’, ‘கொஞ்சம் சிரிப்பு கொஞ்சம் கோபம்’ உள்ளிட்ட பல படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment