49 நாள் தொடப்பக்கட்ட கட்சியும் – கூட்டணி தர்ம குண்டாந்தடிகளும்….அதோ இதோன்னு முடிந்தேவிட்டது 49 நாள் துடப்பகட்ட கட்சியின் சரித்தரம். இது என்ன கொடுமை என பலர் கேட்க மனதுக்குள் ஒரு ஓரமாக கூட்டணி தர்மம் என்று புருடா விட்டு தன் மகன் / மகள் / பேரன் / தோழி என அத்தனை தவறுகளுக்கு டெல்லியின் காலில் சரணாகதி அடைந்து 5 வருஷம் குப்பை கொட்டி கடைசி நாளில் சினிமா வில்லன் போல அந்த கூட்டணியிலிருந்து வெளியே வந்து சீ சீ அந்த கட்சி சரியில்லை என அறிவிக்கும் செல்ஃபீஷ் கட்சியின் நடுவில் இந்த ஆள் எவ்வளவோ பரவாயில்லை. ஆயினும் இவரின் போக்கு சரியானதா என்று கேட்டால் இல்லை என்றே சொல்லுவேன், காரணம் – டெல்லி என்பது ஒரு யூனியன் பிரதேசம் – தமிழ் நாடு போல ஒரு தனி மாநிலம் அல்ல!-
சென்னை போன்ற ஒரு நகரத்துக்கு ஒரு மேயருக்கு என்ன பவர் இருக்குமோ அந்த அளவு மட்டுமே டெல்லி சி எம்முக்கு இதை தெரிந்தும் சி எம்மாய் பொறுப்பு ஏற்றது பெரிய தவறு. ரோட்ல போற ஓனானை எடுத்து பேன்ட்டுக்குள் விட்டுகிட்டு குத்துதே குடையுதேனு சொல்ற கதை தான் இது. சி எம் என்று தெருவில் இறங்கு போராடினாரோ அன்றே அத்தனை கொழுத்த அரசியல் வியாதியும் நகைக்க தொடங்கினர். ஒபமாவை எச்சரிக்கிறென்னு கொலைக்காரன் பேட்டையில் இருந்து குரல் விடும் லோக்கல் கார்ப்பரேஷன் கவுன்சிலரை போல்….!!!
இப்படி தோற்றது கேஜ்ரிவால் இல்லை – இளரத்தம் தான் தோற்றது. அடுத்த முறை எவ்வளவு நியாயஸ்தனாய் இருந்தாலும் மக்கள் ஓட்டு போட ஒரு முறை அல்ல இரு முறை யோசிப்பார்கள். மாற்றம் கொண்டு வர முதலில் அரசியல்வாதியாய் இருக்க வேண்டிய அவசியமே இல்லை. அடுத்து மாற்றத்தை கொண்டு வர எந்த களம், அதை இந்தியா மாதிரி ஒரு டெமாகரட்டிக் கன்ட்ரியில் எவ்வளவு சாத்தியம் என தெரியாமல் இறங்கியது பெரிய முட்டாள்தனம். இதை கேஜ்ரிவால் மட்டும் அல்ல – இந்தியாவின் பிரதமராய் இருக்கும் ஒரு ஆள் கூட சில சமயம் செய்ய முடியாத அளவுக்கு ஆளும் கட்சி எதிர் கட்சி ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்.
அதனால் ஒரு மசோதாவை அரங்கேற்ற இந்தியா போன்ற நாடுகளுக்கு சவால் வெளி நாட்டு சக்திகள் அல்ல உள்ளூர் சகதிகளே. 4 – 6 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள சட்டசபைக்கு போக தயங்கும் பழுத்த அரசியல்வாதியும், நாக்குமூக்கா தலைவனும் டெல்லிக்கு போய் பிரதமரை போய் சந்தித்து தமிழக மக்களுக்கு ஏதாவது செய்யுங்களேன் என்று சொல்வ்து எத்தனை பேடித்தனம். இன்னொருவர் முதல்வர் மாதக்கணக்கில் கோடை வாசம்…….. இதெல்லாம் தான் திராவிட சாபங்கள் எத்தனை ஜென்மங்கள் ஆகுமோ இது எல்லாம் தமிழக மக்களுக்கு விடிவுகாலம் வர...!
0 comments:
Post a Comment