Sunday 16 February 2014

சிறை பிடிக்கப்பட்ட கோச்சடையான்…! கவலையில் சௌந்தர்யா ரஜினிகாந்த்…!



கோச்சடையான் படத்துக்கு கன்னித்தீவு என்று தலைப்புதான் பொருத்தமாக இருக்கும் போலிருக்கிறது!

பின்னே…வருடக்கணக்கில் இழுத்துக்கொண்டே போகிறதே…!

கோச்சடையான் படத்தின் படப்பிடிப்பு லண்டன், சென்னை, கேரளா என பல இடங்களில் நடைபெற்றுக் கொண்டிருந்தபோதே, இன்னொரு பக்கம், கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ் பணிகள் தீவிரமாக நடைபெற்றன.

சௌந்தர்யா ரஜினிகாந்த் தேர்வு செய்த இளைஞர் படை இரவு பகலாக கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ் பணியில் ஈடுபட்டிருந்தது.

ஃபைனல் டச்சாக சில வேலைகள் செய்ய வேண்டி இருந்ததால், அந்த வேலையை சீனாவில் உள்ள மிகப்பெரிய நிறுவனத்திடம் ஒப்படைத்தார். அவ்வப்போது சீனாவுக்கு விசிட் அடித்து வேலைகளையும் மேற்பார்வையிட்டார்.

சி.ஜி. பணியை கவனிக்கும் சீன நிறுவனம் கூறியதன்பேரிலேயே இந்த ஆண்டின் துவக்கத்திலேயே, அதாவது பொங்கல் அன்று கோச்சடையான் படத்தை ரிலீஸ் செய்யப்போவதாக ட்விட்டரில் அறிவித்தார் சௌந்தர்யா ரஜினிகாந்த்.

அடுத்தகட்டமாக தியேட்டரை பிளாக் பண்ணும் வேலைகளிலும் இறங்கினர். ஆனால் சீன நிறுவனம் முதலில் சொன்னபடி பணியை முடிக்கவில்லை. எனவே, கோச்சடையான் படத்தை பொங்கலுக்கு வெளியிட முடியாமல் போனது.

தற்போது என்ன நிலவரம்..?

20 சதவிகித பணிகள் இன்னும் பாக்கி இருக்கிறதாம். எனவே மே மாதம்தான் கோச்சடையான் படம் ரிலீஸ் ஆகும் என்பதே இப்போதைய நிலவரம். குறிப்பிட்டநிறுவனத்திடமிருந்து கோச்சடையான் வேலையைப் பிடுங்கி வேறு இடத்தில் கொடுக்கலாமா என்றால் அதற்கும் உடன்பட மறுக்கிறார்களாம்.

இத்தனை வேகமாக படத்தை எடுத்து கடைசியில் இப்படி ஆகிவிட்டதே…மே மாதமாவது ரிலீஸ் பண்ண முடியுமா…அல்லது மேலும் தாமதப்படுத்திவிடுவார்களா? – என்ற கவலையில் இருக்கிறார் சௌந்தர்யா ரஜினிகாந்த்…!

கோச்சடையானை சீனாவில் சிறை வச்சுட்டாங்களே…

0 comments:

Post a Comment