Sunday 16 February 2014

காதுக்குள் ஒளித்து வைத்த பிட்டு பேப்பர்: 20 வருடங்களுக்கு பின்பு கண்டுபிடிப்பு…!



சவுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் தான் எழுதும் தேர்வில் மோசடி செய்வதற்காக காதினுள் குறிப்பு தாள் (பிட் பேப்பர்) வைத்திருந்தது 20 ஆண்டுகளுக்கு பின்பு தற்போது வெளியே தெரிந்துள்ளது.

குறித்த நபரின் பெயர் விபரங்கள் வெளியிடப்படவில்லை. இந்த நபர் தொடர்ந்து சில நாட்களாக காது வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். அப்போது சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு சென்ற போது தான் இந்த பிட் பேப்பர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

20 ஆண்டுகளுக்கு முன்பு தான் எழுதும் தேர்வில் வெற்றி பெற இவ்வாறு செய்துள்ளார். அவ்வாறு செய்து விட்டு அந்த குறிப்புத் தாளை சுத்தமாக மறந்தும் விட்டுவிட்டாராம்.

தற்போது பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்று, திருமணம் செய்து குழந்தைகளும் பிறந்துவிட்டது. ஆனாலும் அதனை பாதுகாத்து தனது மகன்களுக்கு இவ்வாறான விடயங்களில் ஈடுபடக்கூடாது என அறிவுரை வழங்க தீர்மானித்துள்ளதாக அந்த நபர் கூறியுள்ளார்.

0 comments:

Post a Comment