இளைய தளபதி விஜய் நடிப்பில் கடந்த 2012ல் வெளியாகி மாபெரும் வசூல் சாதனை படைத்த துப்பாக்கி திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக் தயாராகிவருகிறது. ஹாலிடே என்ற பெயரில் தயாராகும் அப்படத்தில் அக்ஷய்குமார் மற்றும் சோனாக்ஷி சின்ஹா ஆகியோர் நடிக்கவுள்ளனர்.
தமிழில் இப்படத்தை இயக்கிய ஏ.ஆர்.முருகதாஸே ஹிந்தியிலும் இயக்கவுள்ளார். இப்படத்தில் இளையதளபதி விஜய் நடித்தால் நன்றாக இருக்குமென்று படத்தின் ஹீரோவான அக்ஷய் குமார் கேட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் கடந்த 2012ல் பிரபுதேவா இயக்கத்தில் அக்ஷய்குமார் நடித்த படமான ரௌடி ரத்தோர் படத்தில் விஜய் ஒரு பாடலுக்கு நடனமாடியது நினைவிருக்கலாம். இதனால் இப்படத்திலும் விஜய் நடிக்கவேண்டுமென அக்ஷய்குமார் விரும்புவதாகக் கூறப்படுகிறது.
அதே சமயம் ரௌடி ரத்தோர் படத்தைப் போல பாடல் காட்சியில் நடிக்காமல், ஓரிரு காட்சிகளில் வரும் ஏதேனும் ஒரு பாத்திரத்தில் நடிக்கலாம் என்றும் கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அறிவிப்புகள் வெளியாகலாம் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். மேலும் இப்படத்திற்குப் பிறகு விஜய் நேரடி பாலிவுட் படத்தில் நடிக்கலாம் என்றும் கிசுகிசுக்கள் வெளியாகியுள்ளன.
இளையதளபதி விஜய் பாலிவுட் படங்களில் நடிக்கப்போவதில்லை என்று சில நாட்களுக்கு முன்னர் டிவிட்டரில் குறிப்பிட்டது நினைவிருக்கலாம்.
0 comments:
Post a Comment