Friday 21 March 2014

கலைஞர் குடும்பத்தில் இப்படி ஒரு ஆளா...!




சமீபகாலத் திரைப்படங்களில் மதுபான, டாஸ்மாக் காட்சிகள் இல்லாத திரைப்படங்களை விரல்விட்டு எண்ணிவிடலாம்.

பெரும்பாலும் அனைத்துத்திரைப்படங்களிலுமே நகைச்சுவை என்கிற பெயரிலோ அல்லது சோகப்பாடல் என்கிற பெயரிலோ ஹீரோவே டாஸ்மாக்கில் சென்று தண்ணியடித்துவிட்டுப் புலம்புவது போன்ற காட்சிகள் ஏராளமாகக் காட்டப்படுகின்றன.


தமிழ் சினிமாவின் புதிய, தவிர்க்கவியலாத ட்ரெண்டாகவே இக்காட்சிகள் உருவாகிவருவது வருந்தத்தக்கது என்று சமூக ஆர்வலர்கள் கூறிவருகின்றனர்.


இந்நிலையில் தயாரிப்பாளரும், நடிகருமான உதயநிதி ஸ்டாலின் இனிமேல் தான் நடிக்கவிருக்கும் எந்தப் படத்திலும் டாஸ்மாக், மதுபானம் சம்பந்தப்பட்ட காட்சிகளில் நடிக்கப்போவதில்லை என்று அறிவித்துள்ளாராம்.


பெரும்பாலும் சந்தானம் நடிக்கும் அனைத்துப் படங்களிலும், டாஸ்மாக் சம்பந்தப்பட்ட காட்சிகள் இடம்பெற்றுவருவது நினைவுகூறத்தக்கது. உதயநிதி படங்களில் சந்தானம் தவிர்க்க இயலாத நடிகராகவும் மாறிவருகிறார்.


இச்சூழ்நிலையில் டாஸ்மாக் காட்சிகள் இடம்பெறாத ஒரு படத்தினை எப்படி உருவாக்கபோகிறார்கள் என்று ரசிகர்கள் பேசிவருகின்றனர். ஆனால் சமீபமாக சந்தானமும் டாஸ்மாக் சம்பந்தப்பட்ட காட்சிகளைக் குறைத்துக் கொள்ளப்போவதாக அறிவித்திருந்ததுகுறிப்பிடத்தக்கது.


உதயநிதி, நயன்தாரா இணைந்து நடித்த இது கதிர்வேலன் காதல் மாபெரும் வெற்றிபெற்றதை அடுத்து, மீண்டும் இவர்கள் இருவரும் இணைந்து நடித்துவரும் நண்பேன்டா திரைப்படம் உருவாகிவருகிறது.


இயக்குனர் ராஜேஷின் உதவி இயக்குனரான ஜெகதீஷ் இயக்கிவரும் இத்திரைப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துவருகிறார்.

0 comments:

Post a Comment