Friday 21 March 2014

கோச்சடையான் படம் ரிலீஸ் ஆக வாய்ப்பே இல்லை. வி.ஐ.பி வெளியிட்ட ஆதாரபூர்வ அதிர்ச்சி தகவல்...!




கோச்சடையான் படத்தின் பாடல் வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் மிக பிரமாண்டமாக நடந்தது. இதையடுத்து இந்த படம் ரிலீஸ் ஆகும் தேதியை ரஜினி ரசிகர்கள் மிகவும் ஆர்வத்தோடு எதிர்பார்த்தனர் என்பது போல செய்திகள் தெரிவித்தன.


இந்நிலையில் கோச்சடையான் படம் வெளிவரும் தேதி குறித்து இன்னும் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவராத நிலையில் கோலிவுட்டின் மிகப்பிரபலமான ஒரு வி.ஐ.பி அதிர்ச்சி தகவல் ஒன்றை கூறியுள்ளார்.


அவர் கூறியது என்னவென்றால் கோச்சடையான் படம் வெளிவர வாய்ப்பே இல்லை என்பதுதான்.

கோச்சடையான் படத்தை முதலில் தயாரிப்பதாக ஒப்புக்கொண்ட நிறுவனம் EROS என்ற நிறுவனம்தான். ஆனால் அதன்பின்னர் EROS நிறுவனத்துடன் ரஜினியின் சார்பில் மீடியா ஒன் என்ற நிறுவனம் கோச்சடையானின் உரிமையை வாங்கியது.


ரிலீஸுக்கு முன்பாக ரூ.50 கோடியை ரஜினியின் மீடியா ஒன் EROS நிறுவனத்திற்கு திருப்பிக்கொடுத்துவிட வேண்டும் என்பதுதான் ஒப்பந்தம்.


ஆனால் ரஜினி தற்போதைய நிலையில் ரூ.50 கோடியை திருப்பித்தரும் சூழ்நிலையில் இல்லை என்கிறது கோலிவுட் வட்டாரம். அனிமேஷன் செலவுகள் அளவுக்கு அதிகமாக ஆகிவிட்டபடியால் தற்போது பணச்சிக்கலில் இருக்கின்றாராம் ரஜினிகாந்த்.

எனவே தியேட்டர் அதிபர்களிடம் இருந்து கோச்சடையான் படத்துக்காக அட்வான்ஸ் வாங்கி, அந்த பணத்தில் இருந்து ரூ.50 கோடியை திருப்பித்தந்துவிடலாம் என ரஜினி நினைத்தார்.


ஆனால் வழக்கமான ரஜினி படமாக கோச்சடையான் இல்லை என்றும், இது ஒரு பொம்மை படம் என்றும் பரவலாக செய்தி பரவி வருவதால் இந்த படத்திற்கு அட்வான்ஸ் கொடுக்க தியேட்டர் அதிபர்கள் தயங்கி வருகின்றனர்.


மேலும் இந்த படத்துக்கு பெரிய தொகை எதையும் அட்வான்ஸாக கொடுக்க முடியாது என்றும், படத்தின் வசூலை பொறுத்துதான் பணம் கொடுக்க முடியும் என்றும் தியேட்டர் அதிபர்கள் வெளிப்படையாக தெரிவித்து வருவதால் தற்போது EROS நிறுவனத்திற்கு எப்படி பணம் கொடுப்பது என தெரியாமல் ரஜினி பெருங்கவலையில் இருக்கிறார் என்கிறது கோலிவுட் வட்டாரம்.

0 comments:

Post a Comment