Friday, 21 March 2014

ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் அஜீத் நடிக்க ஷாலினி திடீர் எதிர்ப்பு...!




அஜீத்தின் தீனா படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆன ஏ.ஆர்.முருகதாஸ் நீண்ட இடைவேளைக்கு பின்னர் அஜீத்துடன் இணைந்து ஒரு படத்தை இயக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த படத்துக்கு முருகதாஸ் ‘தல’ என்று பெயர் கூட வைத்துவிட்டாராம்.


அஜீத் தற்போது கவுதம் மேனனின் படத்தில் நடிக்கவுள்ளார்.

 இந்த படத்தை முடித்தவுடன் அவருடைய கால்ஷீட்டுக்காக கே.வி.ஆனந்த், விஷ்ணுவர்தன், ஆகியோர்கள் ஏற்கனவே காத்திருக்கின்றனர்.

 இந்நிலையில் இந்த வரிசையில் தன்னையும் இணைத்துக்கொண்டார் ஏ.ஆர் முருகதாஸ்.


தீனா படத்தில்தான் முதன்முதலாக அஜீத்தை ‘தல’ என்று கூப்பிட வைத்தது.

அதன்பின்னர் மீண்டும் இருவரும் கஜினி படத்தில் இணைந்தனர்.

ஆனால் ஒருவாரம் மட்டுமே படப்பிடிப்பு நடந்தது.

அந்த படத்தில் இருந்து அஜீத் திடீரென விலகினார்.

அதன்பின்னர் சூர்யா நடிப்பில் அந்த படம் சூப்பர் ஹிட் ஆனது.


தற்போது ஒருஆக்ஷன் கதையின் திரைக்கதை முழுவதையும் முடித்து கையில் வைத்துள்ள முருகதாஸ் இந்த படத்தில் அஜீத் நடித்தால் மிகவ்ம் பொருத்தமாக இருக்கும் என நினைத்து அவரை நேரில் சந்தித்து கதையையும் கூறிவிட்டார்.

ஆனால் அஜீத்திடம் இருந்து இன்னும் முடிவு கிடைக்கவில்லை.


கவுதம் மேனனின் படத்தை முடித்துவிட்டு ஆபரேஷன் செய்யவேண்டும் என ஷாலினி வற்புறுத்தி வருவதால், மனைவியின் பேச்சுக்குத்தான் அவர் முதலிடம் கொடுப்பார் என கூறப்படுகிறது.

மனைவி ஷாலினிகாக ஆபரேஷனுக்கு நேரம் ஒதுக்கிவிட்டு முருகதாஸ் படத்தை அஜீத் மறுத்துவிடுவார் என்றுதான் அவரது வட்டாரங்கள் கூறுகின்றன.

0 comments:

Post a Comment