கடந்த வாரம், வெள்ளிக் கிழமை 6 நேரடி தமிழ் படங்கள் வெளியாகின! குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படங்களில் ஒரு படத்திற்குக் கூட சொல்லும் படியாக ரசிகர்களின் ஆதரவு கிடைக்கவில்லை!
கடந்த வாரம் 6 படங்கள் வெளியாகின என்றால் இந்த வாரம், அதாவது இன்று வெள்ளிக்கிழமை 5 நேரடி தமிழ் படங்கள் ரிலீசாகவிருக்கிறது!
இந்த 5 படங்களும் பெரிய பட்ஜெட்டோ, பெரிய நடிகர்களோ இல்லாமல் சிறிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படங்களாகும்! அந்த ஐந்து படங்களில் டிரைலர் மற்றும் பாடல்கள் மூலம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பில் இருக்கிற படம் அறிமுக இயக்குனர் ராஜு முருகன் இயக்கியுள்ள ’குக்கூ’.
இந்தப் படத்தில் ‘அட்டக்கத்தி’ தினேஷ் ஹீரோவாக நடிக்க, மாளவிகா நாயர் ஹீரோயினாக அறிமுகமாகிறார். இப்படம் நாளை ரிலீசாகிறது.
‘தேனீர் விடுதி’யை இயக்கிய எஸ்.எஸ். குமரனின் அடுத்த படமான ‘கேரள நாட்டிளம் பெண்களுடனே’ படமும் நாளை ரிலீசாகிறது.
இந்தப் படமும் ரசிகர்களிடத்தில் பரவலான எதிர்பார்ப்பில் இருக்கும் படமாகும்! சென்ற வாரம் வெளியான ‘ஆதியும் அந்தமும்’ படத்தை இயக்கிய கௌசிக் இயக்கியிருக்கும் மற்றொரு படம் ‘பனி விழும் நிலவு’.
ஹிருதய், எடன் ஜோடியாக நடித்திருக்கும் இப்படமும் நாளை வெளியாகிறது. ஒரு இயக்குனரின் 2 படங்கள் ஒரு வார இடைவெளியில் ரிலீசாவது குறிப்பிடத்தக்கது. இந்தப் படங்களுடன் துரைவாணன் இயக்கத்தில் ‘அங்காடி தெரு’ மகேஷ் ஹீரோவாக நடித்திருக்கும் ’யாசகன்’,
குமார். டி. இயக்கியிருக்கும் ‘விரட்டு’ என மொத்தம் 5 படங்கள் நாளை ரிலீசாக, இந்தப் படங்களில் எந்தெந்த படங்கள் ஜெயிக்கும் என்பது ஓரிரு நாட்களில் தெரிந்துவிடும்!
0 comments:
Post a Comment