Friday, 21 March 2014

புதிய படத்தில் இருந்து நஸ்ரியா நீக்கம் - காரணமே தெரியலயாம்...!




நடிகை நஸ்ரியா புதிய படத்திலிருந்து திடீரென வெளியேறினார்.நேரம், நய்யாண்டி, ராஜா ராணி என பல படங்களில் பிஸியாக நடித்துக்கொண்டிருந்த நஸ்ரியா நாசிமுக்கு திடீரென்று மல்லுவுட் நடிகர் பஹத் பாசிலுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.


விரைவில் திருமணம் நடக்க உள்ளது. ஆனாலும் நஸ்ரியா படங்களில் நடிக்க பஹத் குடும்பம் தடை போடவில்லை. அவர் விரும்பினால் தொடர்ந்து நடிக்கலாம் என்று பஹத் பாசிலும் கூறினார்.


இதையடுத்து நிச்சயதார்த்தம் முடிந்த கையோடு மல்லுவுட் நடிகர் லால் தயாரிக்க அவரது மகன் லால் ஜூனியர் நடிக்கும் ஹை ஐ யம் டோனி என்ற படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார் நஸ்ரியா.

ஆனால் சமீபத்தில் இப்படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் பற்றிய விவரம் வெளியிடப்பட்டது. அதில் நஸ்ரியா பெயர் இடம்பெறவில்லை. அவருக்கு பதிலாக மியா என்ற ஹீரோயின் பெயர் இடம்பெற்றிருக்கிறது.


அப்படத்திலிருந்து நடிக்காமல் நஸ்ரியா விலகிவிட்டதாக கூறப்படுகிறது. ஆனால் அதற்கான காரணம்பற்றி சரியாக தெரியவில்லை. திருமணத்துக்கு பிறகு தொடர்ந்து நஸ்ரியா நடிக்க விரும்பினாலும் அவரது குடும்பத்தினர் அதற்கு சம்மதிக்கவில்லை என்பதால்தான் அவர் படத்திலிருந்து விலகிவிட்டதாக சொல்லப்படுகிறது.

0 comments:

Post a Comment