Friday, 21 March 2014

சித்த மருத்துவ குறிப்புகள் - உங்களுக்காக...!




தலைவலி குணமாக: விரவி மஞ்சளை விளக்கு எண்ணெய்யில் முக்கி விளக்கில் காட்டி சுட்டு அதன் புகையை மூக்கின் வழியாக உரிஞ்ச தலைவலி, நெஞ்சுவலி முதலியன அகலும்.

இருமல் குணமாக: அரசு மரத்துப்பட்டையை காயவைத்து வறுத்து கரியானவுடன் தூளாக்கி 1 டம்ளர் நீரில் 1 கரண்டி போட்டு கொதித்ததும் வடிகட்டி சர்க்கரை, பால் சேர்த்து குடித்தால் இருமல் குணமாகும்.

ஜலதோஷம்: ஜலதோஷம் காய்ச்சல், தலைவலிக்கு பனங்கிழங்கை அவித்து காயவைத்து இடித்து பொடியாக்கி பனங்கற் கண்டு சேர்த்து சாப்பிட்டால் குணமாகும்.

வறட்டு இருமல் குணமாக :கருவேலமரக் கொழுந்தை கசக்கி சாறு எடுத்து வெந்நீரில் கலந்து சாப்பிட வறட்டு இருமல் குறையும் வெள்ளை முதலான நோய்கள் குணமாகும்.

ஆஸ்துமா, மூச்சுத்திணறல் குணமாக:முசுமுசுக்கை இலையை அரிந்து வெங்காயத்துடன் நெய் விட்டு வதக்கி பகல் உணவில் சேர்த்து சாப்பிட ஆஸ்துமா, மூச்சுதிணறல் குணமாகும்.

சளிகட்டு நீங்க: தூதுவளை, ஆடாதோடா, சங்கன் இலை கண்டங்கத்திரி இலை, சுக்கு, மிளகு, திப்பிலி சேர்த்து கஷாயம் செய்து சாப்பிட இறைப்பு சளிகட்டு நீங்கும்.

பிரயாணத்தின் போது வாந்தி நிறுத்த :தினசரி ஒரு நெல்லிக்காய் என தொடர்ந்து 41 நாட்கள் சாப்பிட்டால் வாந்தி வராது.

காசம் இறைப்பு நீங்க :கரிசலாங்கன்னி, அரிசி, திப்பிலி பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட இறைப்பு குணமாகும்.

தலைப்பாரம் குறைய : நல்லெண்ணையில் தும்பை பூவை போட்டு காய்ச்சி தலையில் தேய்த்து குளித்து வர தலைபாரம் குறையும்.

தும்மல் நிற்க :தூதுவளை பொடியை மிளகு பொடி அல்லது தேனில் அல்லது பாலில் கலந்து சாப்பிட்டால் தும்மல் நிற்கும்.

0 comments:

Post a Comment