சிவகார்த்திகேயனின் திரைப்பயணத்தில் மாபெரும் மைல்கல்லாக உருவாகியிருக்கிறது வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படம்.
மக்கள்மத்தியிலும், வசூலிலும் கொடிகட்டிப் பறந்த இப்படத்தின் படக்குழு மீண்டும் புதிய படத்தில் இணையவுள்ளனர். சிவகார்த்திகேயன் மற்றும் சூரி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ள இப்புதிய படம் வருகிற ஜூன் மாதத்தில் துவங்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.
வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தின் இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில், மீண்டும் அதே படத்தில் பணியாற்றிய தொழில்நுட்பக்
கலைஞர்கள் இணையவுள்ளனர்.
இயக்குனர் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் இப்படத்தினைத் தயாரிக்கவுள்ளது.
வருகிற ஏப்ரல் மாதத்திலிருந்து இப்படத்திற்கான பாடல்கள் இசையமைக்கப்படலாம் என்றும், ஜூன் மாதத்தில் படப்பிடிப்புக்கள்
துவங்கப்பட்டு, செப்டம்பரில் படத்தினை வெளியிடப் படக்குழு முடிவு செய்திருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இச்செய்தியால் மீண்டும் ஒரு நகைச்சுவைத் திருவிழாவாக இப்புதிய படமும் அமையுமா என்ற எதிர்பார்ப்பில் காத்திருக்கின்றனர் ரசிகர்கள்.
0 comments:
Post a Comment