Saturday, 22 March 2014

சைவம் படத்துக்காக தன் முடியை இழந்தார் நடிகர் நாசர்




நடிகர் நாசர், நடிப்பில்  தனக்கென தனி ஒரு பாணியை வகுத்து வைத்துள்ள நாசர் , தன்னுடைய கதாபாத்திரம் சோபிக்க எந்த விதமான முயற்சியும் மேற்கொள்வார்  என்பதற்கு பல முன்னுதாரணங்கள் உண்டு.


இதோ மற்றொன்று .சமீபத்தில் இயக்குனர்  விஜயின்  ' சைவம் ' படப்பிடிப்பின் போது , அவர் ஏற்று நடித்துள்ள ஒரு முதியவர் கதா பாத்திரத்துக்கு என்று  பிரத்தியேகமாக சிகை அலங்காரத்தில் ஒரு மாற்றம் செய்ய  வேண்டி இருந்தது , அவரது முன்னதலையில் ஒரு பகுதியை சவரம் செய்தாக வேண்டும் என்ற சூழ்நிலை .


இதனால் அவர் தற்போது நடிக்கும்  மற்ற படங்கள் பாதிக்க படுமோ என்று தயங்கிய போது   இயக்குனர் விஜய் ,ஒப்பனை கலைஞரும் சிகை அலங்கார   நிபுணருமான பட்டணம் ரஷீத் அவர்களை கலந்து ஆலோசித்தார். அவரது ஆலோசனையின் பேரில் நாசரின் அசல் சிகை அலங்காரம் போலவே ஒரு Wig செய்தனர்.


அதன் உபயத்தில் நாசர் மற்ற படங்களில் இடையூறு இல்லாமல் நடித்தார். படத்தின் rushes பார்த்த இயக்குனர் பெருமிதத்தோடு ' நாசர் சார் நமக்கு கிடைத்த மிக அறிய வகை நடிகர்.
'சைவம்' படத்தில் வரும் அந்த முதியவர் கதாபாத்திரத்தில், நம் குடும்பத்தில் நாம் காணும்  தாத்தாக்களை தத்ரூபமாக கண் முன் கொண்டு வந்து நிறுத்தி உள்ளார் .


பல்வேறு  கதாபாத்திரங்களை  ஏற்று  மெருகூட்டிய  நாசருக்கு ' சைவம் ' மற்றும் ஒரு  மணி மகுடமாக  திகழும் என கூறினார் .


நாசர் , நடிப்பில்  தனக்கென தனி ஒரு பாணியை வகுத்து வைத்துள்ள நாசர் , தன்னுடைய கதாபாத்திரம் சோபிக்க எந்த விதமான முயற்சியும் மேற்கொள்வார்  என்பதற்கு பல முன்னுதாரணங்கள் உண்டு.

0 comments:

Post a Comment