Saturday, 22 March 2014

வரலெட்சுமியை சினிமாவை விட்டு ஓட வைத்தது பாலா தானா..?




பரதேசி படத்திற்கு பிறகு டைரக்டர் பாலா இயக்கும் படம் தாரை தப்பட்டை.


இந்த படத்தில் சசிகுமார் ஜோடியாக நடிக்க வரலெட்சுமி சரத்குமார் ஒப்பந்தமாகி இருக்கிறார்.


பொதுவாக பாலாவின் படத்தில் நடிப்பவர்களை பென்டெடுப்பார் என்பது தெரிந்த விஷயம்தானே.


வெஸ்டர்ன் நடனத்தில் தேர்ச்சி பெற்ற வரலட்சுமி பாலா படத்திற்காக கரகாட்டத்தை முறைப்படி கற்க தஞ்சையை காலையில் தொடங்கி மாலைவரை பயிற்சி பெற்று வருகிறாராம். இதனால் அவருக்கு கடும் சோர்வு ஏற்பட்டுள்ளதாம்.


மேலும் படத்திற்காக சசிகுமார் தனது கெட்டப்பை மாற்ற, தாடியை எல்லாம் எடுத்து பென்சில் மீசை போன்று வைத்திருக்கிறார்.

நாதஸ்வர கலைஞராக சசி வேடம் ஏற்பதால் அதற்கான பயிற்சியையும் அவர் மேற்கொண்டிருக்கிறார்.


இப்படத்தினை பாலா மற்றும் சசிகுமார் இருவரும் இணைந்து தயாரிக்க இருக்கிறார்கள்

0 comments:

Post a Comment