சிம்பு நாயகனாக நடித்த படங்கள் திரைக்கு வந்து 2 வருடங்களாகி விட்டது. ஆனபோதும், அவரைப்பற்றிய பரபரப்பு செய்திகளுக்கு பஞ்சமில்லை. வாலு, வேட்டை மன்னன் படங்களில் ஹன்சிகாவுடன் நடிக்கத் தொடங்கியபோது
அவர்களுக்கிடையே காதல் ஏற்பட்டது, அதை ஹன்சிகாவே அறிவித்ததால் அந்த செய்தி பல மாதங்களாக கொளுந்து விட்டு எரிந்தது. அதையடுத்து, நயன்தாராவுடன் சிம்பு இணைந்து நடிப்பதாக சொன்னபோது, தனது காதலை முறித்துக்கொண்டார் ஹன்சிகா.
அதேபோல் சிம்புவும் தனது டுவிட்டரில் ஹன்சிகா என்னை ரொம்பவே படுத்தி எடுத்து விட்டார். இப்போதுதான் நிம்மதியடைந்துள்ளேன் என்று தான் காதலை முறித்துக்கொண்டதையும் தெரியப்படுத்தினார்.
ஆனால், இதற்கிடையே, இன்னொரு காதல் செய்தியாக ஆண்ட்ரியாவை சிம்புவுடன் இணைத்தும் ஒரு காதல் செய்தி பரவியது. இங்க என்ன சொல்லுது படத்தில் நட்புக்காக இணைந்து நடித்தவர்கள், ஒரு படத்துக்காக ஒரு பாடலையும் இணைந்து பாடினார்கள். அதில் புகைந்ததுதான் அந்த காதல் செய்தி.
ஆனால், ஆண்ட்ரியாவுடன் தனக்கு காதல் கீதல் என்று எதுவும் இல்லாத நிலையில், இப்படியொரு செய்தி பரவியது சிம்புவின் மனதை ரொம்பவே பாதித்து விட்டதாம். இதுபற்றி ஒரு பேட்டியில் பீல் பண்ணி பதிலளித்துள்ள சிம்பு, இனிமேல் என் வேலையை மட்டும் பார்க்கப்போகிறேன் என்றும் தெரிவித்துள்ளார். சிம்புவின் இந்த பதில் அவரை வைத்து படம் தயாரிக்கும் பல படாதிபதிகளின் நெஞ்சில் பால் வார்த்துள்ளது.
0 comments:
Post a Comment