Saturday, 22 March 2014

சூர்யாவுக்கு நோ சொன்ன நடிகைக்கு, போட்டியா களமிறங்கிய கவர்ச்சி புயல்...!




சூர்யா நடிப்பில் லிங்குசாமி இயக்கி வரும் அஞ்சான் படத்தில் வரும் ஒரு குத்துப்பாடலில் நடனம் ஆட பிரபல பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹா மறுத்துவிட்டார்.

பாலிவுட் படங்களுக்கு மட்டுமே தான் ஒரு பாடலுக்கு ஆடுவேன் என்றும் மற்ற மொழி படங்களில் கதாநாயகியாக மட்டுமே நடிப்பேன் என்றும் அவர் கூறியுள்ளார்.

லிங்குசாமியின் அஞ்சான் படத்தில் க்ளைமாக்ஸிற்கு முன்னர் ஒரு அசத்தலான குத்துபாட்டு வர இருக்கிறது. இந்த பாடலில் ஆடுவதற்கு முதலில் சோனாக்ஷி சின்ஹா ஒப்புக்கொண்டார். ஆனால் திடீரென படப்பிடிப்பு ஆரம்பிக்க இரண்டு நாள் இருக்கும்நிலையில் தன்னால் இந்த பாடலுக்கு நடனம் ஆட முடியாது என்று மறுத்துவிட்டார்.

அதன் பிறகு இயக்குனர் லிங்குசாமி ‘தேசி பாய்ஸ்‘ என்ற படத்தில் அசத்தலாக நடித்த Chitrangada Singh என்ற நடிகையை ஒப்பந்தம் செய்து படப்பிடிப்பை நடத்தி வருகிறார். படுபயங்கர கவர்ச்சி உடையில் இவருடைய குத்துப்பாட்டு நடனம் படமாக்கப்பட்டு வருகிறது.

இந்த பாடலை விவேகா எழுதியுள்ளார். யுவன்ஷங்கர் ராஜா இந்த படத்தின் இசையமைப்பு பணியை ஏற்றுள்ளார். இந்த பாடல் படத்தின் வெற்றிக்கு பெரிதும் உறுதுணையாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

0 comments:

Post a Comment