Saturday, 22 March 2014

அனுஷ்கா சர்மாவும், வீராட் கோலியும் அடித்த கூத்தால் , முக்கிய பொறுப்புகளிலிருந்து நீக்கம்...




இந்தி நடிகை அனுஷ்கா சர்மாவும், இந்திய கிரிக்கெட் அணி வீரர் வீராட் கோலியும் காதலித்து வருகிறார்கள் என்பது தெரிந்ததே. இதன்காரணமாக, அனுஷ்கா சர்மா வெளிநாடுகளுக்கு படப்பிடிப்புக்கு சென்றால் கோலியும் அங்கு செல்வார்.


அதேபோல் தனக்கு படப்படிப்பு இல்லாத நாட்களில் கோலி வெளிநாடுகளில் கிரிக்கெட் விளையாடும்போது அனுஷ்கா சர்மாவும் அங்கு சென்று அவருடன் ஜாலியாக ஊர் சுற்றுவார். இது தொடர்கதையாகி விட்ட நிலையில், சமீபத்தில் நடந்த ஆசிய கோப்பை போட்டியின்போது,


 டோனி இல்லாததால் அவருக்கு பதிலாக வீராட் கோலி கேப்டனாக நியமிக்கப்பட்டிருந்தார். அந்த போட்டியில் இறுதி போட்டிக்குகூட இந்தியா தகுதி பெறவில்லை. ஆனால் அந்த தோல்வியைப்பற்றி துளியும் கவலைப்படாத கோலி, அதையடுத்து,


அனுஷ்கா சர்மாவை இலங்கைக்கு வரவைத்து அவருடன் அங்குள்ள கடற்கரையில் ஜாலியாக கும்மாளம் போட்டிருக்கிறார். இந்த போட்டோக்கள் இணையதளங்களில் பரவியதையடுத்து, இந்திய கிரிக்கெட் வாரியத்தைச் சேர்ந்தவர்கள் வீராட் மீது கடும் அதிருப்தியில் உள்ளனர்.


இதையடுத்து நடிகையுடன் ஜாலி டூர் அடிக்கும் வீராட்டுக்கு விளையாட்டில் போதிய ஈடுபாடு இல்லை என்று சிலர் அவர் மீது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறார்களாம்.


இதையடுத்து அணியில் முக்கிய பொறுப்புகளை அவருக்கு கொடுப்பதற்கு சிலர் எதிர்ப்புகள் தெரிவித்து வருகிறார்களாம்.

0 comments:

Post a Comment