ஐசிஐசிஐ வங்கி நாடு முழுவதும் 33 நகரங்களில் 24 மணி நேரமும் செயல்படும் 61 மின்னணுக் கிளைகளை நிறுவியுள்ளது. இதில் கோயம்புத்தூரில் ஒரு கிளை உட்பட தமிழ்நாட்டில் 8 கிளைகள் உள்ளன. இது தற்போது சோதனை முறையில் இயங்கி வருகிறது.
"சுயசேவைகளை 24 மணி நேரமும் தரும் இந்த தானியங்கிக் கிளை முயற்சி வாடிக்கையாளர்களுக்கு தொழில்நுட்பத்துடன் கூடிய வசதியான வங்கிப் பரிவர்தனைகளை மேற்கொள்ள உதவும்" என ஐசிஐசிஐ வங்கியின் செயல் இயக்குனர் ராஜிவ் சபர்வால் தெரிவித்தார்.
சுற்றுச்சூழலுக்குத் தீங்கு விளைவிக்காத பசுமைகாக்கும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக அந்த வங்கி சூரிய சக்தி மூலம் இயங்குகிறது. இவ்வங்கி எடுத்துள்ள இந்த முடிவு வாடிக்கையாளர்களுக்கு வசதியான வேலை நேரங்களையும் அளிக்கும்.
தன் கணக்கில் உடனடி மற்றும் நேரடியாக பணம் செலுத்துதல் (ஐசிஐசிஐ வாடிக்கையாளர்களுக்கு மட்டும்), பணம் பெறுதல், காசோலை செலுத்துதல் மற்றும் அதற்கான ரசீது, வீடியோ மூலமாக வங்கிப் பிரதிநிதியுடன் சேவை மற்றும் கிரெடிட் கார்டு தொடர்பான உரையாடல் போன்ற பல சேவைகளை இவ்வங்கி 24 மணி நேரமும் அளிக்கிறது.
இது மட்டும் அல்லாமல் இன்டர்நெட் வங்கிச் சேவை முனைமம், தொலைபேசி வங்கிச்சேவை, வங்கிக் கணக்கு அறிக்கை, டிமாண்ட் ட்ராப்ட் எனப்படும் கேட்புக் காசோலை விண்ணப்பம், பணப் பரிமாற்றம், காசோலை புத்தக விண்ணப்பம் போன்ற சேவைகள் இந்த தானியங்கி கிளைகள் வழங்கும் சேவைகளில் அடக்கம்.
ஜனவரி மாதத்தில் இந்த 61 தானியங்கி வங்கிகளின் சோதனை ஓட்டத்தில் 12 லட்சம் பரிவர்த்தனைகள் பதிவு செய்யப்பட்டதாக அவ்வங்கித் தெரிவித்தது.
0 comments:
Post a Comment