அழகுப் பராமரிப்பில் பயன்படும் பொருட்களில் ஒன்று தான் கிளிசரின். இத்தகைய பொருளை அழகைப் பராமரிக்க மட்டுமின்றி, வீட்டைப் பராமரிக்கவும் பயன்படுத்தலாம். ஏனெனில் கிளிசரின் வீட்டின் பல்வேறு தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு பெரிதும் உதவியாக உள்ளது.
மேலும் கிளிசரினை வீட்டைப் பராமரிக்கப் பயன்படுத்தினால், வீடு சுத்தமாக இருக்கும். அப்படி கிளிசரினை எப்படியெல்லாம் யூஸ் பண்ணலாம் என்று கேட்கிறீர்களா? அதைப் பற்றி தான் இங்கு கொடுத்துள்ளோம். அதைப் படித்து அதன் படி முயற்சித்துப் பாருங்கள். உண்மையிலேயே அசந்து போய்விடுவீர்கள்.
சில நேரங்களில் கதவுகளில் இருந்து சப்தம் எழுவதோடு, மூட முடியாமல் அவஸ்தைப்படுவோம். அப்போது நாம் பொதுவாக எண்ணெய் தான் பயன்படுத்துவோம். ஆனால் அந்நேரத்தில் கிளிசரின் இருந்தால், அதனைப் பயன்படுத்தினால், சப்தம் எழுவது நிற்பதோடு, கதவுகளை எளிமையாக திறந்து மூடலாம்.
சிலர் வீடுகளில் பல நாட்களாக சில பூட்டுகளைப் பயன்படுத்தாமல் இருப்பார்கள். அத்தகைய பூட்டுகளை திடீரென்று பயன்படுத்த எடுத்தால், அதில் சாவியானது நுழையாமல் இருக்கும். அப்போது அவ்விடத்தில் கிளிசரினைப் பயன்படுத்தினால், எளிதில் பூட்டுகளை திறந்து பூட்டலாம்.
கிளிசரினில் இயற்கையாகவே சுத்தப்படுத்தும் பொருள் உள்ளதால், இதனை பாத்திரம் கழுவும் போது பயன்படுத்தலாம்.
பூ ஜாடியில் உள்ள பூ வாடாமல் நீண்ட நேரம் பிரஷ்ஷாக இருக்க வேண்டுமானால், தண்ணீரில் சிறிது கிளிசரினைக் கலந்து, அதனை பூக்களின் மேல் தெளித்தால், பூக்கள் நீண்ட நேரம் வாடாமல் இருக்கும்.
பொதுவாக கதவுகளில் தூசிகளானது மூலை முடுக்குகளில் தங்கிக் கொண்டு வெளியே வராமல் இருக்கும். ஆனால் கிளிசரின் பயன்படுத்தி ஜன்னல் கதவுகளைத் துடைத்தால், தூசிகள் எளிதில் நீங்கி, கதவுகளும் பாதிப்படையாமல் இருக்கும்.
குழந்தைகளின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது, நீரில் கிளிசரினைக் கலந்து, அதனைக் கொண்டு முட்டைகளை விடலாம். இதனால் பிறந்தநாள் கொண்டாட்டமானது சிறப்பாக இருக்கும்.
0 comments:
Post a Comment