இந்தியாவில் கிடைக்கக்கூடிய பழங்களில் பெரும்பாலானோர் விரும்பி சாப்பிடும் ஒரு பழம் தான் பலாப்பழம். அதிலும் இந்த பழமானது இந்தியாவில் கேரளா, தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவில் தான் அதிகம் விளைகிறது. மேலும் நிறைய மக்கள் பலாப்பழத்தில் ஊட்டச்சத்துக்களானது குறைவாக உள்ளது என்று நினைக்கின்றனர்.
ஆனால் பலாப்பழத்தில் மற்ற பழங்களை விட ஊட்டச்சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளது. அதிலும் உடல் எடையை குறைக்க நினைப்போர் பலாப்பழத்தை சாப்பிட்டால், உடல் எடையில் மாற்றத்தைக் காணலாம். இங்கு பலாப்பழத்தை சாப்பிட்டால் எப்படி உடல் எடையில் மாற்றம் தெரியும் என்று பார்ப்போம்.
பலாப்பழத்தில் சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் குறைவாக உள்ளது. எனவே இது உடல் எடையை நிச்சயம் அதிகரிக்காது. மேலும் இந்த பழத்தை எவ்வளவு வேண்டுமானாலும் உடல் எடை கூடுமோ என்ற அச்சமின்றி சாப்பிடலாம். அதுமட்டுமல்லாமல் உடல் எடையை குறைக்க நினைப்போர் டயட்டில் இதை சேர்த்துக் கொண்டால் நல்ல பலன் கிடைக்கும்.
சோடியம் அதிகம் உள்ள உணவுப் பொருளை உட்கொண்டால் தான் உடல் எடை அதிகரிக்கும். ஆனால் பலாப்பழத்தில் சோடியத்தின் அளவு மிகவும் குறைவாக இருப்பதால், இது உடல் எடையை அதிகரிக்காது.
பலாப்பழத்தில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால், அதனை உட்கொள்ளும் போது, உடலில் தங்கியுள்ள கொழுப்புக்களானது உடைக்கப்பட்டு, உடலில் கொழுப்புக்களின் அளவானது குறையும். மேலும் நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுப் பொருளை உட்கொண்டால், செரிமான மண்டலமானது சீராக செயல்படும். அதுமட்டுமல்லாமல் நார்ச்சத்துள்ள உணவுப் பொருட்கள் உடலின் எனர்ஜியை அதிகரிக்கும்.
பலாப்பழத்தில் எண்ணற்ற வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள் மற்றம் இதர சத்துக்கள் நிறைந்துள்ளன. இதனால் உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேற்றப்பட்டு, உடல் எடையானது அதிகரிக்காமல் இருக்கும். மேலும் இதில் உள்ள சத்துக்கள் உடலுக்கு மட்டுமின்றி, சருமம், கூந்தல் போன்றவற்றிற்கும் தான் நன்மைகளை வழங்குகிறது. எனவே பலாப்பழம் சாப்பிட்டு, உடலை சிக்கென்று அழகாக வைத்துக் கொள்ளுங்கள்.
0 comments:
Post a Comment