கமல், ஆண்ட்ரியா, பூஜா குமார், ராகுல் போஸ் உள்ளிட்ட பலர் நடித்து வரும் படம் ‘விஸ்வரூபம் 2′. கமல் எழுதி இயக்கி வருகிறார். ஆஸ்கர் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது..இப்படத்தின் முழு ஷூட்டிங்கும் முடிந்த நிலையில் இந்த படம் ஏப்ரல் -14ல் ரிலீஸாகும் என்று தெரிய வருகிறது.
ஆனால் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் இன்னும் முடியாததால் படம் தாமதமாகி வருகிறது என்றும் இதற்கிடையில் ரஜினியின் கோச்சடையான் ஏப்ரல் 11ம் தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டதால்.அந்த நாளில் விஸ்வரூபம் 2 ரிலீஸ் செய்ய வேண்டாம் என வினியோகஸ்தர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதால் கமலின் விஸ்வரூபம் 2 ரிலீஸ் தள்ளிப்போகிறது என்று வெளியான தகவலில் கொஞ்சமும் உண்மை இல்லை என்றும் திட்டமிட்டபடி தமிழ் புத்தாண்டில் வெளியாகும் எனவும் ஆஸ்கார் தரப்பு தெரிவிக்கிறது.
‘விஸ்வரூபம்’ சில திரையரங்குகளில் மட்டுமே ஆரோ 3டி தொழில்நுட்பத்தில் வெளியிடப்பட்டது. ஆனால், ‘விஸ்வரூபம் 2′ பொருத்தவரை அனைத்து மொழிகளிலும், திரையரங்குகளிலும் படத்தை ஆரோ 3டி தொழில்நுட்பத்தில் வெளியிட இருக்கிறார்.இதற்க்கான பணிகள் அனைத்தும் முடிந்து விட்ட நிலையில் பிப்ரவரி மாத இறுதியில் டிரெய்லர் வெளியீடு, மார்ச் மாதம் முழுவதும் படத்தினை விளம்பரப்படுத்தும் பணிகளை மேற்கொண்டு ஏப்ரலில் வெளியிட திட்டமிட்டு இருக்கிறார்களாம்.
இதற்கிடையில் ஒரே சமயத்தில் 2 பெரிய ஹீரோக்களின் படம் வந்தால் வசூலில் பாதிப்பு ஏற்படும் என்பதாலே இந்த படம் மே மாதத்துக்கு தள்ளிப்போகும் என வதந்தியைப் பரப்புவதாகவும் இதை நம்ப வேண்டாம் என்றும் கமல் தரப்பிலும் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்கள்
0 comments:
Post a Comment