உணவு பதமாக வாட்டப்பட்ட தகவலை “டுவீட்” (Tweet) செய்யும் டோஸ்டர் இருந்தால் எப்படி இருக்கும்? அமெரிக்காவைச் சேர்ந்த நபரொருவர் அவ்வாறானதொரு டோஸ்டரை உண்மையாக்கியுள்ளார்.
உணவு பதமாக வாட்டப்பட்டுள்ளதை “டுவீட்” செய்யக்கூடிய இந்த டோஸ்டரை அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தைச் சேர்ந்த ஹன்ஸ் சார்ளர் என்பவர் கண்டுபிடித்துள்ளார்.
ஐ.ஓ. பிரிட்ஜ் தொகுதியினை பயன்படுத்தி இந்த டுவீட் செய்யும் டோஸ்டர் உருவாக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்துக்கு இணைய மேம்பாட்டாளரான ஜெஸன் வின்டர்ஸ் என்ற ஹன்ஸின் நண்பர் உதவிபுரிந்துள்ளார்.
இருப்பினும் ஜெஸனுக்கு இவ்வாறானதொரு சிந்தனை தோன்றவில்லை. ஆனால் ஹன்ஸ் அதனை உண்மையாக்கியுள்ளார்.
இதற்காக டோஸ்டரினுள் என்ன நடைபெறுகிறது என அறிந்துகொள்ள வெளியில் உணரி ஒன்றை பொருத்தியுள்ளார் ஹன்ஸ். இதன் மூலம் வாட்டப்படும் உணவு தொடர்பான தகவல்களை அறிந்து ஐ.ஓ பிரிட்ஜ் மூலம் டுவீட் செய்கிறது இந்த டோஸ்டர். ஒவ்வொரு நாளும் காலையில், “வாட்டப்படுகிறது”, ”வாட்டி முடிக்கப்பட்டுள்ளது” மற்றும் “செயலில் இல்லை” என தன்னியக்கமாக டுவீட் செய்கிறது.
இந்த நவீன டோஸ்டர். தற்போது 2000 இற்கும் அதிகமானோர் டுவீட்டரில் இந்த டோஸ்டரை தொடர்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பான தகவல்களை இணையத்தளத்திலும் யூ.டி.யூப் மூலம் வீடியோவாகவும் வெளியிட்டுள்ளார் ஹன்ஸ்.
0 comments:
Post a Comment