Thursday, 27 February 2014

லேடி சூப்பர் ஸ்டார் விஜயசாந்தி அடித்த திடீர் பல்டி..!



பிரபல நடிகையும், தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சியின் நிர்வாகியுமான விஜயசாந்தி, ஆந்திராவின் மெடாக் தொகுதி எம்.பி.யாகவும் உள்ளார்.

இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு தெலங்கான ராஷ்டிர சமிதி கட்சியின் தலைவர் சந்திரசேகரராவுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில், டெல்லியில் காங்கிரஸ் தலைவி சோனியா காந்தியை சந்தித்து, காங்கிரஸ் கட்சியில் விஜயசாந்தி இணைந்து கொண்டார்.

தெலங்கானா ராஷ்டீரிய சமிதி கட்சியின் எம்.பி. விஜயசாந்தி.காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியைச் சந்தித்து, அக்கட்சியில் இணைந்தார்.டெல்லியில் நடந்த இந்தச் சந்திப்பின்போது, காங்கிரஸ் பொதுச் செயலரும், ஆந்திர மாநில காங்கிரஸ் பொறுப்பாளருமான திக்விஜய் சிங் உடன் இருந்தார்.

இதையடுத்து மக்களவை உறுப்பினர் விஜயசாந்தி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் ஆசி பெற்றதாக திக்விஜய் சிங் தெரிவித்தார்.

தொடர்நது இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் “தெலங்கானா விவகாரத்தை எழுப்பிய முதல் நடிகையான விஜயசாந்தி, காங்கிரஸில் இணைய முடிவு செய்ததை தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். சோனியா காந்தியிடம் அவர் ஆசி பெற்றார்.

அவரும் தொடந்து வலியுறுத்தி வந்த தெலங்கானாவுக்கான தனது போராட்டம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து காங்கிரஸில் இணைந்ததாக விஜயசாந்தி கூறியிருக்கிறார்” என்றார் திக்விஜய் சிங்.பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மேடாக் எம்.பி. விஜயசாந்தி, காங்கிரஸுடன் கட்சியை இணைப்பதற்கு தெலங்கானா ராஷ்டீரிய சமிதி தலைமை விரும்பாததை தாம் ஏற்க மறுப்பதாக குறிப்பிட்டார்.

0 comments:

Post a Comment