Thursday 27 February 2014

ஈழத்தமிழர் படத்தில் நடிக்கும் ஹாலிவுட் புலி..!



தமிழ் திரைப்பட வரலாற்றில் பெரும் பொருட்செலவில் முதன்முதலாக நிஜ புலியையும், அனிமேஷன் செய்யப்பட்ட புலியையும் வைத்து அதிரடி காட்சிகளுடன் எடுக்கப்பட்ட சுவாரஸ்யமான படம் பனி விழும் மலர் வனம்.

இயற்கையின் ஆற்றல் எங்கும் பரவி இருக்கிறது என்ற புதுமையான கருத்தை அடிப்படையாகக் கொண்டு இப்படத்தை தயாரித்துள்ளனர்.

இப்படத்தின் இயற்கை அழகு படம் பார்க்கும் ரசிகர்கள் கண்களுக்கு விருந்தாக, திரையரங்கை விட்டு வெளியேறிய பின்னரும் அது பற்றி சிந்திக்க வைக்க கூடிய அளவுக்கு இப்படம் உள்ளதாக படக்குழுவினர் கூறுகின்றனர்.

நிஜப்புலி சம்பந்தப்பட்ட காட்சிகள் “Hangover”, “We bought a zoo” போன்ற ஹாலிவுட் திரைப்படங்களில் நடித்த புலியினை வைத்து பிரத்யேகமாக கலிபோர்னியாவில் உள்ள விலங்குகள் சரணாலயத்தில் எடுக்கப்பட்டது.

அனிமேஷன் புலியை சென்னையில் உள்ள ஈழத்தவர் நிறுவனமான Raymax நிறுவனத்தினால் அனிமேஷன் செய்யப்பட்டு படத்தில் இணைக்கப்பட்டுள்ளன.

ஈழத் தமிழர்கள் மாருதி நந்தன், ரவி இந்திரன் மற்றும் எஸ்.கே. அரவிந்த் ஆகியோர் இப்படத்தினை தயாரித்துள்ளனர். இவர்களை தவிர மேலும் பல ஈழத் தமிழர்கள் இப்படத்திற்கு இரண்டு வருடங்களாக உழைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழக அரசின் தணிக்கைக் குழுவினரின் பாராட்டுக்களை இந்த திரைப்படம் பெற்றிருப்பது பாராட்டுக்குரியது.

0 comments:

Post a Comment