Thursday 27 February 2014

மகா சிவராத்திரியன்று இரவில் கண் விழிப்பது ஏன் தெரியுமா..?



சிவபெருமான் பக்தர்களுக்கு மிகவும் முக்கியமான திருவிழாவாக கருதப்படுகிறது சிவராத்திரி. இத்திருவிழாவின் போது பக்தர்கள் விரதம் இருந்து, இரவு முழுவதும் விழித்திருந்து, கடவுளிடம் இருந்து அருள் பெறுவார்கள். இது சிவபெருமான் மற்றும் பார்வதி தேவியின் திருமணமாக நம்பப்படுவதால், இந்தியா முழுவதும் இதனை மிகுந்த கோலாகலத்துடன் கொண்டாடுகிறார்கள்.

துறவியாய் இருந்த சிவபெருமான், பார்வதி தேவியை மணந்த நாளையே மகாசிவராத்திரியாக கொண்டாடப்படுகிறது. இந்நன்னாளில், சிவபெருமானை போலவே நல்லதொரு கணவனை பெற, பெண்கள் அவரை நினைத்து விரதம் கடைப்பிடித்து அவரை வழிப்படுவர். திருமணமான பெண்கள் தங்கள் கணவன் மற்றும் குடும்பத்தின் நலனுக்காக, இந்நாளில் விரதத்தை கடைப்பிடிப்பார்கள்.

சிவபெருமானின் திருமண கதை போக, சிவராத்திரியுடன் இன்னும் பல கதைகளும் அடங்கியுள்ளது. மகா சிவராத்திரியுடன் தொடர்பில் இருக்கும் பிற கதைகளைப் பற்றி இப்போது பார்க்கலாமா?

கடவுள்களுக்கு கடவுள்

 'மகாதேவ்' அல்லது 'கடவுள்களின் கடவுள்' என்றே சிவபெருமான் பெரும்பாலான நேரத்தில் அழைக்கப்படுகிறார். அதற்கு அனைத்து கடவுள்களை விட வல்லமை மிக்கவர் என்று பொருள் தரும். சரி இதில்எ சிவராத்திரியுடன் தொடர்பில் இருக்கும் மற்றொரு கதை. ஒரு முறை பிரம்மனும் விஷ்ணுவும், இரண்டு பேரில் யார் பெரியவர் என்ற சண்டையை போட்டுக் கொண்டிருந்தனர். அவர்களின் சண்டை தீவிரம் அடைந்த போது, அவர்கள் மத்தியில் ஒரு எரியும் தூண் அல்லது சிவலிங்கம் ஒன்று தோன்றியது.

லிங்கத்தின் மேல் அல்லது அடி பாகத்தை கண்டறிபவர் தான் வல்லமை மிக்கவர் என்று அந்த லிங்கத்தில் இருந்து வந்த குரல் அந்த இருவரிடமும் கூறியது. உடனே பிரம்மன் லிங்கத்தின் மேல் பாகத்தை நோக்கி சென்றார். விஷ்ணுவோ லிங்கத்தின் கீழ் பாகத்தை நோக்கி சென்றார். ஆனால் இருவராலுமே எங்கே முடிகிறது என்பதை கண்டு கொள்ள முடியவில்லை. சிறிது நேரத்திற்கு பிறகு, லிங்கத்திற்கு முடிவே இல்லை என்பதை விஷ்ணு புரிந்து கொண்டு தன் தேடுதலை நிறுத்தினார்.

இருப்பினும் பிரம்மன் ஒரு விளையாட்டை விளையாட நினைத்தார். லிங்கத்தின் அடி பாகத்தை கண்டுபிடித்து விட்டதாக பொய் சொல்ல முடிவு செய்தார். அதற்கு அத்தாட்சியாக ஒரு தாழம் பூவையும் கொண்டு வந்தார். ஆனால் அந்த பொய்யை கேட்ட சிவபெருமான் வெகுண்டெழுந்து அவரை இனி பூலோகத்தில் யாருமே வணங்க மாட்டார்கள் என்று அவரை சபித்தார்.

சிவபெருமான் ஒரு மிகப்பெரிய சக்தியாக திகழ்வதற்கு இந்த புராணமே ஒரு உதாரணம். அனைத்துக்கும் ஆரம்பமாக (ஆதி) விளங்கும் அவருக்கு முடிவே (அந்தம்) கிடையாது. மகாசிவராத்திரியின் போது தான் முதன் முதலில் சிவபெருமான் லிங்க வடிவை பெற்றார் என்று நம்பப்படுகிறது. அதனால் தான் இந்த திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

இரவு நேர விழிப்பு நிலை 

சிவராத்திரியின் போது மக்கள் ஏன் இரவு முழுவதும் விழித்திருக்கிறார்கள் என்பதற்கு மற்றொரு புகழ் பெற்ற கதை ஒன்று உள்ளது. ஒரு முறை, ஒரு ஏழை காட்டுவாசி, விறகு எடுக்க காட்டிற்குள் சென்ற போது, அங்கே தொலைந்து போனான். இருட்டு ஆகி கொண்டிருப்பதால், காட்டிற்குள் விலங்குகளின் சப்தங்கள் கேட்க தொடங்கின.

அதனை கேட்டு பயந்த காட்டுவாசி, ஒரு மரத்தின் மீது ஏறினான். கிளைகளுக்குள் அமர்ந்திந்திருந்த அவனுக்கு, கண் அயர்ந்தால் கீழே விழுந்து விடுவோமோ என்ற பயம் இருந்தது. அதனால் தூக்கம் வராமல் இருக்க, அந்த மரத்தில் உள்ள இலைகளை பறித்து, சிவபெருமானின் பெயரை உச்சரித்த படியே, கீழே போட ஆரம்பித்தான்.

இரவு முழுவதும் இதனை செய்து, தூங்காமல் விழித்திருந்தான். பொழுது விடிந்தவுடன், தான் அவனுக்கு தெரிந்து, தான் ஏறியது ஒரு வில்வ மரம் என்றும், அவன் கீழே போட்ட வில்வ இலைகள் அனைத்தும் கீழே இலைகளுக்கு நடுவே மறைந்திருந்த லிங்கத்தின் மீது விழுந்தது என்றும். எதையும் எதிர்ப்பார்க்காமல் இப்படி சிவபெருமானை இரவு முழுவதும் வழிபட்டது அவரை குளிரச் செய்தது. அதனால் அவனுக்கு காட்சி அளித்து அருளினார். அதனால் இரவு முழுவதும் கண் விழித்து சிவபெருமானை வழிப்படும் பழக்கமும் வந்தது.

இதுவே சிவராத்திரியை பற்றிய சில கதைகள். வட்டாரங்களை பொறுத்து இந்த கதைகள் மாறுபடலாம். ஆனால் இந்த திருவிழாவின் மகத்துவம் மாறுவதில்லை. வறண்ட குளிர் காலம் முடிந்து இளவேனிற் காலம் தொடங்கும் போது தான் மகா சிவராத்திரி கொண்டாடப்படும். அறியாமையை நீக்கி அறிவுச்சுடரை அனைத்து மனிதர்களுக்கும் ஏற்றுவதே இந்த விழாவின் நோக்கமாகும்.

0 comments:

Post a Comment