இப்போதெல்லாம் நொடியில் சமைக்க கூடிய ‘டின்’ உணவுகள் கிடைக்கின்றன. ஏன், டின் உணவை வாங்கி அப்படியே சாப்பிடக் கூடிய முழு உணவுகள் மற்றும் ‘ஸ்நாக்ஸ்’ உணவுகள் கிடைக்கின்றன.
கணவன் மனைவி இருவரும் வேலைக்கு போகும் இக்கால சூழ்நிலையில் ‘ரெடிமேட்’ உணவுகள் ஒரு வரப்பிரசாதம் தான். உணவின் முக்கியத்துவத்தினால், அதை பல நாள் கெடாமல் வைக்கும் வழிகளை தொன்று தொற்றே மனிதன் தேடி வருகிறான். இந்த தொழில் நுட்பம் தற்போது வெகுவாக முன்னேறியுள்ளது.
உணவை காக்கும் ரசாயன பொருட்களில்லாமல் பழச்சாறுகள் “டெட்ரா – பேக்”கில் கிடைக் கின்றன. இருந்தாலும், உணமேலும் கெடாமல் பல நாள் பாதுகாக்கும். ‘டெட்ரா பேக்’, இராசாயன பொருட்கள் முதலியனவற்றை தொடர்ந்து உபயோகித்தால் உடலுக்கு ஊறு விளைவிக்கும் என்று அறிவுறுத்தி வந்த நிலையில், இங்கிலாந்து நாட்டில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில், பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும் உணவுகளை அதிகம் எடுத்து கொண்டால் அது ஆபத்தை விளைவிக்கும் என்பதை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
இது குறித்து சுற்று சூழல் ஆய்வாளர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை அறிக்கையில், உணவு பொருட்களை பேக்கிங் செய்யும்போது, பாதுகாப்பாக வைத்திருப்பதற்கு மற்றும் அதனை பதப்படுத்துவதற்கு உதவும் வேதி பொருட்கள் நீண்ட நாள் பயன்பாட்டில் மனித உடல் நலனுக்கு தீங்கு விளைவிக்கும் என தெரிவித்துள்ளனர்.
உணவை கெட்டு போகாமல் வைத்திருக்க சேர்க்கப்படும் பார்மால்டிஹைடு என்ற வேதி பொருள் புற்றுநோய் உருவாக்கும் தன்மை கொண்டது. இந்த பார்மால்டிஹைடு அனைத்து இடங்களிலும் பரவலாக உள்ளது. தாகத்தை தணிப்பதற்காக குடிக்கும் குளிர்பானங்களை சேமிக்கும் பிளாஸ்டிக் பாட்டில்கள் மற்றும் சாப்பாட்டு மேஜையில் உள்ள தட்டுகள் போன்ற பொருட்களில் பார்மால்டிஹைடு வேதி பொருள் சிறிய அளவில் சேர்க்கப்படுகிறது.
இரண்டாவதாக, மனிதனின் ஹார்மோன் உற்பத்தியில் பைஸ்பீனால் ஏ, டிரைபியூட்டைல்டின், டிரைகுளோசன் மற்றும் தாலேட்டுகள் ஆகிய வேதி பொருட்கள் உணவு பொருள் பாதுகாப்பில் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன.மூன்றாவதாக, உணவை பாதுகாக்கும் வேதி பொருட்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்தை தாண்டும்.
தற்போது உணவு பொருட்கள் பேக்கிங் செய்யப்படுவது என்பது அதிகரித்து வரும் நிலையில், அது குறித்த விழிப்புணர்வு விரைவாகவும் மற்றும் நம்பகதன்மை யுடனும் அதிக பயன்பாட்டை கொண்டிருக்கும் மக்களிடம் சென்று சேர வேண்டியது அவசியம் என ஆய்வாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.எனவே, சுகாதாரம் என்ற பெயரில் பாதுகாக்கப்பட்ட உணவு பொருட்களை நீண்ட நாட்களுக்கு பயன்படுத்துவதை பொதுமக்கள் தவிர்ப்பது நலம் என்று ஆய்வு முடிவில் தெரிய வந்துள்ளது.
0 comments:
Post a Comment