Saturday, 22 February 2014

ஏ.டி.எம்.மில் பணம் எடுக்க போறீங்களா..? எச்சரிக்கை..!



வங்கிக் கணக்கில் இருந்து பணம் எடுப்பதை ஒரு நிமிடத்திலேயே முடித்துத்தரும் ஏ.டி.எம். இந்த ஹை-டெக் யுகத்தில் நமக்கெல்லாம் வரப்பிரசாதம் தான். ஆனால் எந்த ஒரு வசதிக்கும் பின்னால் சில பிரச்னைகள் ஒளிந்திருக்கும்.

ஏ.டி.எம். பயன்படுத்தும் போது நீங்கள் மிகவும் பாதுகாப்பாக உங்கள் பணத்தைக் கையாள உதவும் வகையில் இதோ சில வழிகள்.. வரிசையில் நின்று பணம் எடுக்கும் அளவுக்கு பிஸியாக இருக்கும் ஏ.டி.எம். பூத்துகளையே தேர்ந்தெடுங்கள்.

அதுபோல ஒரே அறையில் இரண்டு மெஷின்கள் இயங்கும் பூத்துகளை இரவு வேளைகளில் பயன்படுத்துவதை தவிருங்கள். ஏ.டி.எம்.மைப் பயன்படுத்தும் ஆரம்பகாலத்தில் நம்பிக்கையான ஒருவரின் துணை அவசியம்.

பெரியகடைகள் மற்றும் பெட்ரோல் பங்குகளில் கார்டு மூலம் பணம் செலுத்தும் வசதி இருக்கிறது. சில நாணயக் குறைவான நிறுவனங்களில் உங்கள் கார்டை தேய்த்துப் பணம் பெற்ற பிறகு, ரகசியமாக தாங்கள் வைத்திருக்கும் இன்னொரு மெஷினிலும் தேய்த்துக் கொள்வார்கள்.

இதன் மூலம் உங்கள் கார்டின் அனைத்து விவரங்களும் அந்தத் திருட்டு மெஷினில் பதிவாகிவிடும். பிறகு ஒரு போலி கார்டைத் தயாரித்து உங்கள் பணத்தை அபேஸ் செய்துவிடுவார்கள். எனவே உங்கள் கார்டை தேய்க்கும் போது உங்கள் கண்கள் அதிலேயே கவனமாக இருக்க வேண்டும் என்பதை மறவாதீர்கள்.

முடிந்த மட்டிலும் உங்கள் கணக்கு இருக்கும் வங்கியின் ஏ.டி.எம்.மைப் பயன்படுத்துவதே சிறந்தது. இதனால் சிலசமயம் பணம் வருவதில் கோளாறு ஏற்பட்டாலோ, அல்லது பணம் வராமல் தொகை உங்கள் கணக்கில் கழிக்கப்பட்டாலோ மேற்கொண்டு நாம் எடுக்க வேண்டிய முயற்சிகளுக்கான நடைமுறைகள் கொஞ்சம் எளிதாக இருக்கும்.

0 comments:

Post a Comment