Saturday, 22 February 2014

அனுஷ்கா, காஜலை ஓரங்கட்ட நம்ம நயன்தாரா..!




உதயநிதி ஸ்டாலின் – நயன்தாரா நடித்த இது கதிர்வேலன் காதல் படம் இதுவரை வசூல் செய்த தகவலின்படி தயாரிப்பாளருக்கு சுமார் 15 கோடி வரை லாபம் கிடைத்துள்ளதாக தெரிகிறது.

இதனால் அதிக உற்சாகத்துடன் இருக்கிறார் உதயநிதி. இந்த லாபத்திற்கு முக்கிய காரணம் நயன்தாராதான் என்று புகழ்ந்து வருகிறார்.

இதே உற்சாகத்தில் அடுத்த படத்திலும் நயன்தாராவை ஜோடியாக ஒப்பந்தம் செய்த உதயநிதி ´நண்பேண்டா´ படத்திற்காக நயன்தாராவுக்கு சம்பளமாக ரூ.1.5 கோடி கொடுக்க முன்வந்துள்ளார். இதில் 50 லட்ச ரூபாய் அட்வான்ஸ் கொடுத்துவிட்டாராம்.

இதற்கு முன்னர் இதே படத்திற்கு ஒப்பந்தம் ஆன காஜல் அகர்வாலுக்கு சம்பளமே ஐம்பது லட்ச ரூபாய்தான் பேசியிருந்தார் உதயநிதி. ஆனால் ஒரு கோடி அதிகம் ஆனாலும் பரவாயில்லை. நயன்தாராதான் ஜோடியாக நடிக்கவேண்டும் என்று பிடிவாதமாக அவரை மீண்டும் ஜோடியாக்கியுள்ளார்.

நயன்தாரா சம்பளம் இதுவரை தமிழ்த்திரையுலகில் எந்த நடிகையும் வாங்காத சம்பளம் என கோலிவுட்டில் பேசப்பட்டு வருகிறது.

அனுஷ்கா பாஹுபாலி, ராணி ருத்ரம்மா படத்திற்கு கூட ஒரு கோடிதான் சம்பளம் பெற்றுள்ளார். ஆனால் இரண்டும் செம ரிஸ்க்கான கேரக்டர்கள். சண்டைப்பயிற்சி, வாள் பயிற்சி என வாங்கிய ஒரு கோடிக்கு கடுமையாக வேலை செய்கிறார்.

ஆனால் சாதாரண காமெடி மற்றும் காதல் படங்களில் நடிக்கும் நயன்தாராவுக்கு இவ்வளவு சம்பளமா? என சக நடிகைகள் பொறாமைப்படும் அளவுக்கு நிலைமை உள்ளது.

0 comments:

Post a Comment