Saturday, 22 February 2014

“ஹால்மார்க்’ நகைகளுக்கு தனி அடையாள எண் – இன்னும் மூன்று மாதங்களில் அமல்..!



10 கிராமிற்கு மேற்பட்ட ‘ஹால்மார்க்’ முத்திரை உள்ள ஒவ்வொரு தங்க நகைக்கும் தனி அடையாள எண் வழங்க முடிவு செய்துள்ளது. இதன் மூலம் ஒருவர் தாம் வாங்கும் நகையை தயாரித்த நிறுவனம், தயாரித்த நாள், எடை, தரம் உள்ளிட்ட எல்லா விவரங்களையும் அறிந்து கொள்ளலாம்.

இன்னும் மூன்று மாதங்களில் அமலாக்கப்படும் இது ஒவ்வொவருக்கும் தாம் ஏமாற்றப்படவில்லை என்ற நம்பிக்கையையும் அளிக்கும் என்பதால் இத்தகைய நடைமுறை மூலம் தங்க நகைகளின் விற்பனையும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் நகைகளின் தரத்தை குறிக்கும் “ஹால் மார்க்’ முத்திரைக்கான உரிமக் கட்டணத்தையும் மத்திய அரசு குறைத்துள்ளது. இதன்படி மூன்று ஆண்டுகளுக்கான “ஹால்மார்க்’ சான்றிதழ் கட்டணம், 3 லட்சத்திற்கு குறைவான மக்கள் வசிக்கும் சிறிய நகரங்களில், 2,500 ரூபாயாக குறைக்கப்பட்டு உள்ளது.

இக்கட்டணம் 10 லட்சம் மக்கள் தொகை உள்ள நகரங்களுக்கு 5,000 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

தற்போதைய நிலையில் நாடு முழுவதும் உள்ள நகை நிறுவனங்கள் மூன்று ஆண்டுகளுக்கு ‘ஹால்மார்க்’ முத்திரையை பயன்படுத்த 20 ஆயிரம் ரூபாய் செலுத்துகின்றன.

ஆர்வம் காட்டும் இக்கட்டணம் குறைக்கப்பட்டு உள்ளதால் இனி சிறிய நகை கடைகள் கூட தரமான ‘ஹால்மார்க்’ நகைகளை விற்பதற்கு ஆர்வம் காட்டும்.

‘ஹால்மார்க்’ முத்திரைக்கு தனி எண் வழங்கும் திட்டத்தை அடுத்த மூன்று மாதங்களில் அமலுக்கு கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

0 comments:

Post a Comment