தமிழ் படங்களில் பாலிவுட், மல்லுவுட் நடிகைகள்தான் தொடர்ச்சியாக அறிமுகமாகி கொண்டிருக்கின்றனர். தமிழ் பெண்ணை அறிமுகம் செய்யாதது ஏன்? என்று இயக்குனர்களிடம் கேட்டால், அவர்கள் நடிக்க வர தயங்குகிறார்கள் என்று பதில் தருகின்றனர்.
தற்போது அன்புடன் அன்பரசி என்ற படத்தில் தமிழ் பெண் தாரணி ஹீரோயினாக அறிமுகமாகிறார். இதுபற்றி பட இயக்குனரும், ஹீரோவுமான ஆல்வின் அமலபிரசன்னா கூறியதாவது: தமிழ் பெண்கள் அழகானவர்கள்.
ஆனால் நடிக்க வர தயக்கம் காட்டுவதாக கூறுகிறார்கள். இப்படத்துக்கு ஒரு அழகான தமிழ் பெண் தேவைப்பட்டார். அப்படி தேடி கிடைத்தவர்தான் தாரணி. அழகான இளம்பெண்ணை அழகில்லாத இளைஞன் காதலிக்கிறான். ஆனால் தான் அழகாக இல்லை என்ற தாழ்வு மனப்பான்மை அவனை வாட்டுகிறது.
ஒரு கட்டத்தில் அவளிடம் தன் காதலை சொல்கிறான். அப்போது எதிர்பாராத ஒரு சம்பவம் நடக்கிறது. அதை மையமாக வைத்து கதை, திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. இதில் பாண்டு, கோவை செந்தில், வேல்முருகன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
உதயசங்கர் ஒளிப்பதிவு. சத்யதேவ் இசை. மார்ட்டின் துரைராஜ் தயாரிக்கிறார். திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், சிறுமலை பகுதியை சுற்றி ஷூட்டிங் நடந்துள்ளது. இவ்வாறு ஆல்வின் அமலபிரசன்னா கூறினார்.
0 comments:
Post a Comment