என்னைப் பற்றி வதந்தி பரப்புகிறார்கள் என்று ஆவேசமாக கூறினார் சமந்தா. சமீப காலமாக அடிக்கடி சர்ச்சையில் சிக்கி வருகிறார் சமந்தா. தோல் அலர்ஜியால் பாதிப்பு, படங்களில் இருந்து நீக்கம், சித்தார்த்துடன் காதல், டோலிவுட் நடிகர் மகேஷ்பாபு பட போஸ்டர் விவகாரத்தில் தலையிட்டு கண்டனம் தெரிவித்தது என பரபரப்பாக பேசப்பட்டு வருகிறார்.
அதே பாணியில் சூர்யாவுடன் நடிக்கும் அஞ்சான் படம் தொடர்பாகவும் அவரை பற்றி இணையதளங்களில் சர்ச்சைக்குரிய தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. இப்படத்தின் ஸ்டில்கள் வெளியிடப்பட்டதில் சமந்தாவின் படங்கள் இடம் பெறவில்லை. இதையடுத்து அவர் கோபம் அடைந்து பேசி வருவதாக கோலிவுட்டில் கிசுகிசு பரவியது. இதையறிந்த சமந்தா ஷாக் ஆனார்.
இதுபற்றி அவர் கூறும்போது, சமீபத்தில் அஞ்சான் படம் சம்பந்தமாக நான் கோபம் அடைந்ததாக கிசுகிசுக்கள் வெளிவருகிறது. அது யாரோ கிளப்பிவிடும் வதந்திதான். எந்தவொரு விஷயம்பற்றி நான் பேட்டி அளித்தாலும் அதுதொடர்பாக எனது டுவிட்டர் பக்கத்திலும் தெரிவித்துவிடுவேன். அஞ்சான் பற்றி நான் இதுவரை எந்தவொரு கருத்தும் தெரிவிக்கவில்லை. டுவிட்டரிலும் அதுபற்றி குறிப்பிடவில்லை என்றார்.
0 comments:
Post a Comment