Saturday, 1 March 2014

சூர்யாவின் சத்யமேவ ஜெயதே...!



ஒரு சில திரைப் பிரபலங்கள் தங்களது படங்களின் மூலம் மட்டும் சமூகத்தில் உள்ள கொடுமைகளைத் தட்டிக் கேட்பதோடு நின்றுவிடாமல், நிஜ வாழ்விலும் சமூக வளர்ச்சிக்குப் பாடுபட்டும் வருகின்றனர். ரசிகர்மன்றங்கள் மூலமாகவும் எண்ணற்ற நல்ல காரியங்கள் நடைபெற்றுவருவது குறிப்பிடத்தக்கது.

ஆனால் இதெல்லாம் தாண்டி மக்களிடம் தாங்கள் பெற்றிருக்கும் பாப்புலாரிட்டியைப் பயன்படுத்தி சமூகத்தில் நிலவிவரும் பிரச்னைகளுக்குத்
தீர்வு காணும் வகையில் பாலிவுட் சூப்பர் ஸ்டாரான அமீர்கான் தொகுத்து வழங்கும் சத்யமேவ ஜெயதே என்ற நிகழ்ச்சி கடந்த சில வருடங்களாக மிகவும் பாப்புலராக இந்தி டிவி சேனல்களில் நடைபெற்றுவருகிறது.

இப்பொழுது சத்யமேவ ஜெயதே நிகழ்ச்சியின் இரண்டாம் பாகமான சீசன் -2 மார்ச் 2 ஆம் தேதியான நாளை துவங்கவுள்ளது. இந்நிகழ்ச்சியின் பாப்புலாரிட்டி மற்றும் இது சமூகத்தில் ஏற்படுத்தியிருக்கும் மாறுதல்களுக்காக இதன் தயாரிப்பாளர்கள் இந்நிகழ்ச்சியை பிற மொழிகளிலும் டப்பிங் செய்து வெளியிடவுள்ளனர். அந்தவகையில் இந்நிகழ்ச்சியை அந்தந்த மொழிகளில் மிகவும் பாப்புலரான நடிகர்கள் புரமோட் செய்யவுள்ளனர்.

தெலுங்கில் இந்நிகழ்ச்சியைப் புரமோட் செய்ய சூர்யாவும், மலையாளத்தில் மோகன்லாலும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சூர்யாவின் சிங்கம்-2 திரைப்படம் தெலுங்கில் மாபெரும் வெற்றிபெற்றது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment