தன்னை விட 36 வயது குறைந்த நடிகையை காதலிப்பது போல் நடித்ததால் மம்முட்டி மீது விமர்சனம் எழுந்துள்ளது.
தமிழில் தளபதி, அழகன், கிளி பேச்சு கேட்க வா, கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன், ஆனந்தம் உள்பட பல்வேறு படங்களில் நடித்திருப்பவர் மம்முட்டி. 62 வயதான இவர், மல்லுவுட் எழுத்தாளர் வைகம் முஹமத் பஷீர் எழுதிய பால்ய கலாசக்தி என்ற மலையாள படத்தில் நடித்தார்.
அவருக்கு ஜோடியாக 26 வயதே ஆன இஷா தல்வார் ஜோடியாக நடித்தார். இப்படம் சமீபத்தில் திரைக்கு வந்தது.
அப்போது 36 வயது இளையவரான இஷாவுடன் காதல் காட்சிகளில் மம்முட்டி நடித்தது குறித்து சர்ச்சை ஏற்பட்டது. இதையடுத்து மம்முட்டி – இஷா சம்பந்தப்பட்ட 15 நிமிட காட்சிகள் வெட்டப்பட்டன.
120 நிமிடம் ஓடி கொண்டிருந்த படம் தற்போது 105 நிமிடமாக குறைக்கப்பட்டிருக்கிறது. இதை பட தரப்பில் மறுத்தாலும் மம்முட்டி தன்னைவிட 36 வயது குறைந்த நடிகையுடன் நடித்த காதல் காட்சிகளை இரசிகர்கள் ஏற்காததால் அக்காட்சிகள் நீக்கப்பட்டதாக பட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன
0 comments:
Post a Comment