Saturday, 1 March 2014

சிவப்பு விளக்கு பெண்களின் வாழ்க்கை படமானது..!



சிவப்பு விளக்கு பெண்களின் வாழ்க்கை, ‘சிவப்பு எனக்கு பிடிக்கும்‘ என்ற பெயரில் திரைப்படமாகி உள்ளது. இயக்கி நடித்திருக்கிறார் யுரேகா. அவர் கூறியதாவது: மும்பை, கொல்கத்தா போன்ற இடங்களில் சிவப்பு விளக்கு பகுதிகள் உள்ளன.

 இதனால் பாலியல் பலாத்காரங்கள் குறைந்திருக்கிறது. தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பாலியல் பலாத்காரங்கள் நடக்கிறது. அதை குறைக்கும் வகையில் இப்பகுதியிலும் சிவப்பு விளக்கு பகுதிகளை சட்டப்படி அமைக்க வேண்டும் என்பதை இப்படம் வலியுறுத்துகிறது.

இதனால் பாலியல் குற்றங்கள் குறையும். கலாசாரத்துக்கு எதிராக இப்படத்தை எடுக்கவில்லை. பாலியல் தொழிலுக்கு வருபவர்கள் வறுமை உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக விலைமாது ஆகின்றனர்.

சமூக விரோதிகளாலும் பல பெண்கள் இந்த நிலைக்கு ஆட்படுகிறார்கள். இதை பதிவு செய்வதே இப்படத்தின் நோக்கம். படத்தை சதிஷ்குமார் வெளியிடுகிறார். புதுமுகம் சான்ட்ரா எமி ஹீரோயின். சிவசரவணன், அனிஷ் இசை. மகேஸ்வரன் ஒளிப்பதிவு.
இவ்வாறு இயக்குனர் யுரேகா கூறினார்.

0 comments:

Post a Comment