Wednesday 19 February 2014

மணிரத்னத்தின் டவுசர் காலம்..!



மணி மணியாய், ரத்தினச் சுருக்கமாய் பேசும் இயக்குநர் மணிரத்னத்தின் டவுசர் காலம் இதோ…

‘எல்லோரும் நாளைக்கி ஹோம்வொர்க் பண்ணிட்டு வந்திடணும்’னு மிஸ் சொன்னால், இவர் மட்டும் ‘ஏன்?, எதுக்கு? எப்படி?’ எனத் தவணை முறையில் கேள்வி கேட்டு அடி வாங்கியிருப்பார்.

பக்கத்து பெஞ்சில் தூங்கி விழும் கேர்ள்ஃப்ரெண்ட் அஞ்சலியை, ‘ஏந்திரி அஞ்சலி ஏந்திரி… ஏந்திரி அஞ்சலி ஏந்திரி… மிஸ் வந்துட்டாங்க’ எனக் கத்தியே பக்கத்து க்ளாஸ் அஞ்சலிகளையும் எழுப்பியிருப்பார்.

ஃப்ரெண்ட்ஸ் என்றால் அலாதிப் பிரியமான இவர், க்ளாஸ் ரூமில் கூட ஃப்ரெண்டின் தோளின் மேல் கைபோட்டபடிதான் பாடம் படித்திருப்பார்.

பக்கத்து வீட்டு குட்டிப்பசங்களைத் தூக்கிச்சென்று காடு கரை, கண்மாயெல்லாம் ஒளித்துவைத்து, வீட்டில் உள்ளவர்களைத் தேடி அலையவைப்பதை வழக்கமாக வைத்திருப்பார்.

வகுப்பில் வாத்தியார் என்ன கேள்வி கேட்டாலும், அரை மணி நேரம் கழித்து சாவகாசமாக ஹஸ்கி வாய்ஸில் ரிப்ளை கொடுப்பது இவரின் தனி ஸ்டைல்.

கூடப் படிக்கும் பசங்க இவரிடம், ‘ஏன்டா?’ என்றால் ‘எல்லாம்’ என்றும் ‘என்னாச்சு?’ என்று கேட்டால், ‘புரியல’ என்றும் சம்பந்தமே இல்லாமல் பேசிக் குழப்பியிருப்பார்.

டீச்சரை வழிமறித்து, ‘மிஸ் நீங்க நல்ல மிஸ். நான் பாஸாவேன்னு நினைக்கலை. ஆனா ஃபெயிலாயிடுவேனோனு பயமா இருக்கு. யோசிச்சு மார்க் போடுங்க’னு சொல்லிவிட்டு ஓடியிருப்பார்.

நான் பிரதமரானால் கட்டுரைக்கு ஒரே வரியில் ‘எல்லாம் செய்வேன்’ என எழுதி மடித்துக் கொடுத்ததற்காக, இம்போசிஷன் எழுதியிருப்பார்.

எக்ஸாமில் மேப் வரைவதில் இவரை அடித்துக்கொள்ள ஆளே இருந்திருக்க மாட்டார்கள். இந்தியா மேப் மட்டும் இல்லாமல் இலங்கை, பாகிஸ்தான் மேப்களையும் கூட இம்மி பிசகாமல் வரைவதில் கில்லாடியாக இருந்திருப்பார்.

பிடிக்காத ஃப்ரெண்டுங்களையெல்லாம் கருப்பு சாத்தான், குட்டிச் சாத்தான், குண்டு சாத்தான் எனப் பட்டப்பெயர்கள் வைத்தே அழைத்திருப்பார். ரயில், ஏரி, காடுகளில் டிராவல் பண்றதுனா, கொள்ளைப் பிரியமான இவருக்கு காஷ்மீர்தான் ஃபேவரைட் டூரிஸ்ட் ஸ்பாட்!

0 comments:

Post a Comment