ராஜிவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு தூக்கு தண்டனையிலிருந்து தப்பிய சாந்தன்,முருகன், பேரறிவாளன், நளினி ஆகியோரை விடுதலை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. முதல்வர் ஜெயலலிதா தலைமையில் இன்று நடைபெற்ற தமிழகஅமைச்சரவை கூட்டத்தில் மூவரையும் விடுதலை செய்ய முடிவு செய்யப்பட்டது. அமைச்சரவை முடிவு குறித்து சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.
இதனையடுத்து சாந்தன், முருகன், பேரறிவாளன் நளினி ஆகியோரை விடுவிக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி மாநில அரசுக்குள்ள அதிகாரத்தின் அடிப்படையில் இவர்கள் விடுதலை செய்யப்படுவதாகவும் முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
குற்றம்சாட்டப்பட்டவர்கள் 23 ஆண்டுகள் சிறையில் இருந்ததை கருத்தில் கொண்டு, அவர்களை விடுதலை செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இவர்களை தவிர ஜெயக்குமார், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன் உள்ளிட்டோரையும் விடுவிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
மாநில அரசே விடுவிக்கும்:
தமிழக அமைச்சரவையின் முடிவு குறித்து மத்திய அரசுக்கு விரைவில் தகவல் தெரிவிக்கப்படும் என்று ஜெயலலிதா கூறியுள்ளார். முடிவு குறித்து மத்திய அரசு 3 நாட்களுக்குள் பதில் அளிக்காவிட்டால், அவர்களை மாநில அரசே விடுதலை செய்யும் என்றும் ஜெயலலிதா அறிவித்துள்ளார். முன்னதாக நேற்று உச்சநீதிமன்றம் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment