Monday, 24 March 2014

திரையில் ஒலிக்காத கண்ணதாசனின் பாடல்..!




சின்னப்ப தேவர் தயாரிப்பில் எம்ஜிஆர், சாவித்திரி நடித்த படம் ‘வேட்டைக்காரன்’. குறுகிய கால தயாரிப்பு. எம்.ஏ.திருமுகம் இயக்கினார். ஆரூர்தாஸ் வசனங்கள். கே.வி.மகாதேவன் இசை. 100 நாள் படம். 1965ல் ஸ்ரீதரின் தயாரிப்பு, இயக்கத்தில் வெளியான படம் ‘வெண்ணிற ஆடை’.

 கதை, வசனம், தயாரிப்பு, இயக்கம் என நான்கு பொறுப்பையும் ஸ்ரீதர் கவனித்தார். எம்.எஸ்.விஸ்வநாதன், ராமமூர்த்தி இசையமைத்தனர். முற்றிலும் புதுமுகங்கள் நடிக்க வேண்டும் என ஸ்ரீதர் விரும்பினார். அதேபோல் ஸ்ரீகாந்தை (‘தங்கப்பதக்கம்’ ஸ்ரீகாந்த்) ஹீரோவாக அறிமுகப்படுத்தினார்.


நிர்மலாவுக்கு முக்கிய ரோல் படத்தில் இருந்தது. கிட்டத்தட்ட செகண்ட் ஹீரோயின்தான். மெயின் ஹீரோயின் வேடத்துக்கு யாரை நடிக்க வைக்கலாம் என ஸ்ரீதர் குழப்பத்தில் இருந்தார். அப்போதுதான் கன்னடத்தில் ஓரிரு படங்களில் நடித்திருந்த ஜெயலலிதாவை பற்றி கேள்விப்பட்டார். அந்த படங்களை பார்த்தார். அவரையே புக் செய்தார். இந்த படம் மூலம்தான் ஜெயலலிதா தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார்.


படம் முடிந்து சென்சாருக்கு சென்றது. தேவையே இல்லாமல் ஏதோ ஒரு காட்சிக்காக சென்சார் இப்படத்துக்கு ஏ சான்றிதழ் கொடுத்து வ¤ட்டது. இது பட யூனிட்டாருக்கு அதிர்ச்சியாக இருநதது. ஸ்ரீதருக்கோ பெரும் அதிர்ச்சியை இது தந்தது. படத்தில் கவர்ச்சி காட்ச¤கள் அதிகம் போலிருக்கிறது என்ற பேச்சு பரவிவிட்டது. முதல் நாள் முதல் ஷோவில் கல்லூரி மாணவர்கள், இளைஞர்களின் பட்டாளம் நிரம்பி வழிந்தது.


படம் முடிந்து போகும்போது தியேடடர் சீட்டுகளை கிழித்து, கலாட்டா செய்துவிட்டு போனார்கள். சில தியேட்டர்களில் பாதி படத்திலேயே கலாட்டா செய்தனர். காரணம், முழு நீள குடும்ப கதை படமிது.


ரசிகர்களின் இந்த செயல்களால் படத்தை தியேட்டரிலிருந்து எடுத்துவிட தியேட்டர் உரிமையாளர்கள் முடிவு செய்துவிட்டனர். மூன்றே வாரத்தில் பல தியேட்டர்களிலிருந்து படத்தை எடுத்தும் விட்டனர். இதற்கிடையே படம் பார்த்த பத்திரிகையாளர்களின் விமர்சனங்கள் வெளிவர தொடங்கியது.


அது படத்துக்கு திருப்புமுனையாக அமைந்தது. ஸ்ரீதரின் நேர்மையான உழைப்பை பத்திரிகைகள் பாராட்டியிருந்தன. கிராமப்புறங்களில் படம் பிக்அப் ஆக தொடங்கியது. படம் நல்லா இருக்கு எனற டாக் பரவ ஆரம்பிக்கவே வேறு தியேட்டர்களில் படத்தை ரிலீஸ் செய்தார் ஸ்ரீதர். அதன் பின் படம் நிற்காமல் ஓடு ஓடு என ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடியது. அமர்க்களமான ஹிட் என்றால் இதுதான் என சொல்லும்
அளவுக்கு பேசப்பட்டது.


படத்தில், நீராடும் கண்கள் இங்கே... போராடும் நெஞ்சம் அங்கே... நீ வாராதிருந¢தால்... என்னை பாராதிருந்தால்... நெஞ்சம் மாறாதிருப்பேன் இல்லையா...என்றொரு கண்ணதாசனின் பாடல் பதிவாகியிருந்தது. படத்தில் ஸ்ரீகாந்தை பார்த்து ஹீரோயின் பாடும் வரிகள் இவை. இதை மக்கள் ஏற்பார்களா என சந்தேகத்தை ஸ்ரீதருக்கு அவரது உதவியாளர்கள் ஏற்படுத்திவிட்டார்கள்.


இதனால் இவ்வளவு அழகான பாடல் படத்தில் இடம்பெறாமலே போய்விட்டது. இதன் மெட்டும் மிக அருமையாக இருக்கும். எனக்கு இந்த பாடல் வரிகளை கொடுத்து சம்பளமும் பெற்றுவிட்டதால், அந்த வரிகளை வேறு படத்துக்கு பயன்படுத்த வேண்டும் என்ற எண்ணம் கண்ணதாசனுக்கு தோன்றவில்லை. அவன்தான் கவிஞன் என என்னிடம் ஒருமுறை ஸ்ரீதர் கூறினார்.

எழுத்தாளர் ஜெயகாந்தனின் ‘உன்னைப்போல் ஒருவன்’ படம் இந்த ஆண்டில்தான் வெளியானது. தேசிய விருது பெற்ற படமிது. ஜெயகாந்தன் எழுதி, இயக்கி, தயாரித்த படம். ஆசியா ஜோதி பிலிம்ஸ் பெயரில் இப்படத்தை தயாரித்தார். பிரபலம் ஆகாத பிரபாகர், வீராசாமி, காந்திமதி நடித்த படம். ஆனால், இதன் கதையும் அதை சொன்ன விதமும் புதுமையானது. நட்சத்திர நடிகர்கள் இல்லை என்பதால் இப்படத்தை வாங்க வினியோகஸ்தர்கள் முன்வரவில்லை.


 ஜெயகாந்தனே படத்தை வெளியிட்டார். ரிலீசுக்கு பின்பு தியேட்டர் உரிமையாளர்களும் கேம் ஆடினார்கள். டிக்கெட் நிறைய இருந்தும் தியேட்டரில் ஹவுஸ்புல் என போர்டு வைத்துவிடுவார்கள். இதை நம்பி ரசிகர்கள் திரும்பிவிடுவார்கள். ரசிகர்கள் போனதும் போர்டை எடுத்துவிடுவார்கள். படம் பார்க்க ரசிகர்கள் வரவில்லை எனக் கூறி படத்தை தியேட்டரிலிருந்து எடுத்துவிடுவார்கள். இந்த விஷயத்தை ஜெயகாந்தனே எனனிடம் கூறி வருத்தப்பட்டிருக்கிறார்.


தமிழ், தெலுங்கு இரு மொழியிலும் வெளியான படம் ‘இதயக்கமலம்’. எல்.வி.ப¤ரசாத் தயாரித்தார். அவரது சிஷ்யரான ஸ்ரீகாந்த் இப்படத்தை இயக்கினார். வசனம் ஆரூர்தாஸ். கே.வி.மகாதேவனின் இசையில் எல்லா பாடல்களும் ஹிட். ரவிச்சந்திரனுடன் கே.ஆர்.விஜயா இரட்டை வேடத்தில் நடித்த படம். நன்றாக ஓடியது.

0 comments:

Post a Comment