நிமிர்ந்து நில் படம் பார்த்து பலரும் தன்னை பாராட்டினர்கள் என்று சமுத்திரகனி தெரிவித்தார்.
அதில் முக்கியமாக சகாயம் IAS தன்னிடம் பேசும்போது ஊழலுக்கு எதிராக இந்த உலகில் யார் குரல் கொடுத்தாலும் அவன் என் நண்பன் என்று சொல்லி பாராட்டினார்.
அவரின் ’லஞ்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர்ந்து’ என்ற வாசகத்தை தான் படத்தில் பயன்படுத்தினேன், அவர் அழைத்து பாராட்டியது எனக்கு பெருமையாக இருந்தது.
ஜெயம் ரவியின் கதாபாத்திரதின் பெயர் அரவிந்த் என்று இருப்பதால் பலரும் ‘ஆம் ஆத்மி’ கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலோடு அதை ஒப்பிடுகிறார்கள்.
நான் மூன்று வருடங்களுக்கு முன்பாகவே இந்தக் கதையை ஜெயம் ரவியிடம் சொல்லிவிட்டேன். அதனால் அதற்கு இதற்கும் சமந்தமில்லை.
நாங்கள் நினைத்த பலவிஷயங்கள் படம் வெளிவருவதற்கு முன்பாகவே நடந்து வந்தன. அரவிந்த் என்ற என் நண்பன் இங்கே இருக்கும் ஊழல் விஷயங்களால் திணறிப்போய் வெளிநாட்டில் செட்டிலாகிவிட்டான்.
அவனை நினைத்துத் தான் ஜெயம் ரவியின் கதாபாத்திரதிற்கு அரவிந்த் என்று பெயர் வைத்தேன் என்றார்.
0 comments:
Post a Comment