கேடி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகிப் பின்னர் ஓரிரு வருடங்களில் முன்னணி நடிகையாகவும் மாறினார் தமன்னா. ஆனால் அதன்பின்னர் கடந்த இரண்டு ஆண்டுகளில் தமிழில் அதிகப் படங்கள் நடிக்காமல் தெலுங்கு,ஹிந்திப் படங்களில் தனது கவனத்தைச் செலுத்திவந்தார்.
தல அஜித்தின் வீரம் படத்தின் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவிற்கு ரீ-எண்ட்ரியான தமன்னா மீண்டும் முன்னணி நடிகையாகும் முயற்சியில்
ஈடுபட்டுவருகிறார். இந்நிலையில் தல அஜித்தின் வீரம் திரைப்படம் தெலுங்கில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகியுள்ளது. இப்படத்தின் விளம்பர
மற்றும் ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சிக்குத் தமன்னாவை தயாரிப்பாளர் அழைத்துள்ளார்.
இந்த அழைப்பினை மறுத்த தமன்னா தான் படத்தின் விளம்பர நிகழ்ச்சிக்கு வரவேண்டுமானால் 15 லட்சம் ரூபாய் தரவேண்டும் என்று கூறியதாகவும், இதனால் கோபமடைந்த படக்குழு, தெலுங்குத் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தில் புகாரளித்து, தமன்னாவை இனி எந்தத் தயாரிப்பாளரும் புக் பண்ணக்கூடாது என்று தீர்மானம் நிறைவேற்றிவிட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
இதைக் கேட்டு அதிர்ந்துபோன தமன்னா, உடனே சம்பந்தப்பட்ட தயாரிப்பாளர்களைச் சந்தித்து மன்னிப்புக் கேட்டதாகவும், இதற்குப் பிறகு தான் நடிக்கும் படங்களின் விளம்பர நிகழ்ச்சிகளுக்கு முழு ஆதரவு தருவேன் என்றும் ஒப்புக் கொண்டாராம். இதற்குப் பிறகு தமன்னா மீதான தடையை விலக்கிக் கொண்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழில் வீரம் திரைப்படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள புதிய திரைப்படத்தில் நடிக்கலாம் என்று கிசுகிசுக்கப்படுகிறது.
0 comments:
Post a Comment