Wednesday 26 February 2014

சிவபெருமான் ஏன் '' பாங் '' என்னும் சோமபானத்தை குடிக்கிறார்...?



நம்மில் பல பேர் இந்த கேள்வியை அடிக்கடி கேட்டிருப்போம்.ஏன் சிவபெருமான் பாங் என்ற சோமபானத்தை குடிக்கிறார்? பாங் என்றால் என்னவென்று தெரியாதவர்களுக்கு - அது கஞ்சா செடியின் இலைகள் மற்றும் பூக்களில் இருந்து செய்யப்படும் மதி மயக்குகிற பானமாகும். இந்த பழமை வாய்ந்த இந்திய பானம், கடவுள்களின் அமுதம் என்று நம்பப்படுகிறது.

பாங்கில் கஞ்சா கலந்திருப்பதால், அதனை பருகுவது அவமதிப்பாக பார்க்கப்படுகிறது. இருப்பினும், ஹிந்து புராணங்களின் படி, பாங் என்பது சிறப்பாக செயல்படும், மனித இனத்திற்கு கிடைத்த இயற்கை மருந்தாகும். பல நரம்பியல் சீர்குலைவு, சரும வியாதிகள் மற்றும் புண்களுக்கு இது தீர்வாக அமையும்.

சரி மீண்டும் கேள்விக்கு வருவோம், சிவபெருமான் ஏன் பாங் பானத்தை விரும்பி குடிக்கிறார். பாங் பற்றியும் சிவபெருமானுக்கும் அதற்கும் உள்ள உறவை பற்றியும் சுற்றித் திரியும் பல கதைகளை பற்றி இப்போது பார்க்கலாமா?

வேதங்கள்

 வேதங்களின் படி, அமுதம் வேண்டி, தேவர்களும் அசுரர்களும் பாற்கடலை கடைந்த போது, ஒரு துளி அமுதம் மத்ரா மலையின் மீது விழுந்ததாம். அந்த துளி விழுந்த இடத்தில் இருந்து, ஒரு செடி முளைத்ததாம். அந்த செடியின் இலைகளில் இருந்து எடுக்கப்படும் பானம், அனைத்து கடவுள்களுக்கும் பிரியமான ஒன்றாகும். அதில் சிவபெருமானும் அடக்கம். அதன் பின், மனித இனம் அந்த இன்பத்தை அனுபவிக்க, இமயமலையில் இருந்து அந்த கஞ்சாவை சிவபெருமான் கீழே கொண்டு வந்துள்ளார்.

கங்கையின் தங்கை 

பாங் என்பது கங்கா தேவியின் தங்கையாகவும் நம்பப்படுகிறது. அதனால் தான் பாங்கும் கங்கையும் சிவபெருமானின் தலையில், இரண்டு பக்கமும் குடியிருக்கிறது. இதற்கு மற்றொரு விளக்கமும் அளிக்கப்படுகிறது - கஞ்சா செடி என்பது பார்வதி தேவியின் மற்றொரு வடிவமாக பார்க்கப்படுகிறது. அவரும் அவரின் தங்கை கங்கா தேவியுடன் சிவபெருமானுடன் வசிக்கிறார்.

சோம பானம் 

கடவுள்கள் பருகும் சோமபானத்தை தான் பாங் என்று பழங்கால புராணங்கள் கூறுகிறது. இருப்பினும் சோமபானமும் பாங்கும் ஒன்றா அல்லது வேறுபட்டதா என்பது இன்னும் சரியாக தெரியவில்லை.

சிவபெருமானும் பாங்கும்

 சிவபெருமான் எப்போதுமே ஆழ்ந்த தியானத்தில் இருப்பதால், முழுமையான பேரின்பம் மற்றும் ஒருமுகப்படுத்தும் திறனை பெற பாங் பானம் பெரிதும் உதவுகிறது என்று நம்பப்படுகிறது. அதனால் தான் யோகிகளும் துறவிகளு பாங் பருகி, கஞ்சாவை புகைக்கின்றனர்.

அதனால் சிவபெருமானை போல் தாங்களும் பேரின்ப நிலையை அடையலாம். சிவபெருமான் ஏன் பாங் பானத்தை குடிக்கிறார் என்பதற்கு மேற்கூறியவையே சில காரணங்கள். எந்த காரணமாக இருந்தாலும் சரி, சிவராத்திர்யின் போது பாங் குடிப்பது என்பது ஒரு முக்கியமான நடவடிக்கையாகும். இது பல நோயை குணப்படுத்தி பல விதமான வலிகளை நீக்கும் என்று நம்பப்படுகிறது.


0 comments:

Post a Comment