ஜேஎஸ்கே பிலிம்ஸ் ஜே சதீஷ்குமாரின் மூன்று படங்களுக்கு இன்று ஒரேநாளில் இசை வெளியீட்டு விழா நடக்கிறது. தமிழ் சினிமாவில் சமீப நாட்களில் இப்படி ஆடியோ வெளியீடு நடத்தப்பட்டதில்லை.
ஒரு கன்னியும் மூன்று களவாணிகளும், சிவப்பு எனக்குப் பிடிக்கும் மற்றும் ஆள் என்ற மூன்று படங்களை வாங்கி வெளியிடுகிறார் ஜே சதீஷ்குமார். இந்த மூன்று படங்களுக்கும் தயாரிப்பாளர்கள் வேறாக இருந்தாலும், மொத்தமாக வாங்கிவிட்டதால் சதீஷ்குமார்தான் உண்மையான தயாரிப்பாளர்.
இவற்றின் இசை வெளியீடு இன்று ஒரே நாளில் நடக்கிறது. ஒரு கன்னியும் மூன்று களவாணிகளும் சிம்பு தேவன் படம். அருள்நிதி-பிந்து மாதவி நடித்துள்ளனர். நடராஜன் சங்கரன் என்பவர் இசையில் ஒரு பாடல் மட்டும் இன்று ரிலீசாகிறது.
யுரேகா இயக்கத்தில் மகேஷ்வரன் இசையில் உருவாகும் படம் சிவப்பு எனக்குப் பிடிக்கும். புதுமுகங்கள் நடிக்கும் இந்தப் படத்தின் இசையும் இன்றுதான் வெளியாகிறது.
விதார்த் நடிக்கும் ஆள் படத்தை ஆனந்த் கிருஷ்ணா இயக்கியுள்ளார். ஜோஹன் இசையில் உருவாகியுள்ள இந்தப் பட இசையும் இன்று வெளியாகிறது. ஆனால் மூன்று இசை வெளியீடுகளுமே ஒரு தனியார் பண்பலை வானொலியின் ஸ்டுடியோவில் நடக்கிறது.
0 comments:
Post a Comment