Sunday, 23 February 2014

ஐம்பது வயதிற்கு மேற்பட்ட ஆண்களுக்கான சில ஊட்டச்சத்து குறிப்புகள்..!




வைட்டமின் பி12 அடங்கிய உணவுகள் வைட்டமின் பி12 அடங்கிய உணவுகள், இரத்த அணுக்களின் ஆரோக்கியத்திற்கும், நரம்புகளின் ஆரோக்கியத்திற்கும் மிகவும் அவசியமானது. மேலும் டி.என்.ஏ உருவாக்கத்திற்கும் இது மிகவும் அவசியமானதாக விளங்குகிறது.

நமது உணவில் உள்ள புரதத்தை எல்லைக்குள் வைத்து கொள்ளவும், செரிமானத்தின் போது புரதத்தை பெப்சினாக வெளியேற்றவும் பி12 உதவுகிறது. வயதான பிறகு நமது வயிற்றில் உள்ள அமிலம் குறைந்து விடும். இதனால் ஊட்டச்சத்துகளை உட்கொள்ளும் தன்மை குறைந்து விடும். அதில் பி12-ம் அடங்கும். இதனால் ஆரம்பகட்டத்திலிருந்தே பி12 அதிகம் அடங்கியுள்ள மீன், இறைச்சி போன்றவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும். ஒருவேளை நீங்கள் சைவமாக இருந்தால், இவற்றிற்கு நிகரான உணவுகளை எடுத்து கொள்ள வேண்டும்.



கால்சியம் மற்றும் வைட்டமின் டி நம் உடலில் காஸ்ட்ரிக் அமிலம் மற்றும் ஹார்மோன் மாற்றங்களால், வைட்டமின் டி மற்றும் கால்சியம் உட்கிரகிக்கும் அளவு போன்றவை முப்பது வயதிற்கு முன்பிருந்ததை விட, நாற்பது வயதில் சரிவர இருப்பதில்லை. அதனால் 30 வயதிற்குள்ளயே கால்ஷியம் அடங்கிய உணவுகளை போதிய அளவில் உட்கொள்ளுங்கள்.

அப்படி இல்லையென்றாலும் கூட காலம் தாழ்த்திவிடாமல் கீரை வகைகள், பச்சைப் பூக்கோசு, அக்ரூட், சூடை மீன், நகர மீன், பரட்டை கீரை மற்றும் கொழுப்பு குறைந்த அல்லது கொழுப்பு இல்லாத பால் போன்ற கால்சியம் அதிகமுள்ள உணவுகளை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.



மீன் வகைகள் நமது உணவில் மீன் வகைகளை நன்றாக சேர்க்க வேண்டும். மீனில் உள்ள ஒமேகா-3 என்ற கொழுப்பு அமிலம் நமது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியம். இந்த அமிலம் நமது உடலில் சுரப்பதில்லை. நகர, கிழங்கான், சூடை போன்ற கடல் மீன்கள் மற்றும் கடல் உணவுகளான நீர்ப்பாசி, இறால் போன்றவற்றை உணவில் அதிக அளவில் சேர்த்து கொள்ள வேண்டும்.




பழங்கள் பழங்களில் உள்ள அதிகளவிலான சத்துக்கள் உடலுக்கு தேவையான அனைத்தையும் தருவதால் அவைகளை உணவில் அதிகளவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். ஒவ்வொரு காலநிலையிலும் பல பழங்கள் எளிதில் நமக்கு கிடைக்கின்றன. பழங்கள் எளிய செரிமானத்திற்கு வழிவகுக்கிறது. ஐம்பது வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு பழங்கள் மிகவும் அவசியம். அவர்கள் இனிப்பு அதிகம் சேர்க்க கூடாது. ஆனால் பழங்களில் உள்ள இனிப்பு அவர்களின் சர்க்கரை அளவை பாதிப்பதில்லை.



பழச்சாறுகள் ஐம்பது வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு ஊட்டச்சத்துள்ள உணவுகள் மிக அவசியம். அவர்களால் கடின உணவை எடுத்துக்கொள்ள முடியாது. அதற்கு பதிலாக பழச்சாறுகளை எடுத்து கொள்ளவது மிகவும் நல்லது. நமது உடலில் உணவுகளின் எளிதான செரிமானத்திற்கும், சிறந்த நீறேற்றியாகவும் பழச்சாறு பயன்படுகிறது. மேலும் நமது உடலால் எளிதாக உட்கிரகிக்கப்படுகிறது பழச்சாறு.



முழு தானிய வகைகள் முழு தானிய உணவுகளான கோதுமையால் செய்யப்பட்ட உணவுகள் மற்றும் கைகுத்தல் அரிசி போன்றவை நமது உடலில் பசியை தூண்டி, சர்க்கரை அளவில் நிலைப்பாட்டை ஏற்படுத்துகிறது.

நாம் அனைவரும் பாலிஷ் செய்யப்பட்ட தானியங்களை விடுத்து, முழு தானிய வகைகளை உட்கொள்ள ஆரம்பிக்க வேண்டும். இவை உங்கள் பசியை சீராகி சர்க்கரையை மெதுவாக உங்கள் உடலில் சேர்க்கும். இதனால் அளவுக்கு அதிகமாக உண்ணுவதை கட்டுப்படுத்தி, சர்க்கரை அளவில் அபரிமிதமான மாற்றத்தை ஏற்படுத்தும்.

0 comments:

Post a Comment