Sunday, 23 February 2014

பருக்களால் ஏற்படும் வடுக்களை போக்கும் வழிகள்..!



பருக்களை கிள்ளுவதால் வடுக்கள் தோன்றுகிறது. பருக்கள் காய்ந்ததும் அதை பிய்த்து எறியும் போது, அந்தப் பகுதியில் கருமை படர்ந்து தழும்பாகி விடுகிறது. தொடர்ந்து ஒரு மாதத்துக்கு இங்கே நான் சொல்லப் போகும் சிகிச்சைகளை செய்து பாருங்கள்.

கருமை நீங்கி, முகம் பொலிவாகிவிடும். கோரைக்கிழங்கு, பூலான் கிழங்கு,கஸ்தூரி மஞ்சள் மூன்றையும் சம அளவு எடுத்து மிஷினில் கொடுத்து நைஸாக அரைத்து சலித்துக் கொள்ளுங்கள். தினமும் குளித்து முடித்ததும், இந்தப் பவுடரை முகத்தில் பூசி நன்றாக தேய்த்துக் கழுவுங்கள்.

கோரைக்கிழங்கு, முகத்தில் இருக்கும் அநாவசிய முடிகளை அகற்றும், பூலான் கிழங்கும், கஸ்தூரி மஞ்சளும் தோலை மிருதுவாக்கி, வடுக்களை மறைய செய்யும்.

* இன்னொரு சிகிச்சை.... சர்க்கரை 1 டீஸ்பூன், ஜாதிக்காய் பவுடர் அரை டீஸ்பூன்.... லவங்க பவுடர் - அரை டீஸ்பூன், சந்தனம் 1 டீஸ்பூன்... இவற்றை ஏடு இல்லாத தயிரில் கலந்து பேஸ்ட்டாக்குங்கள். கன்னத்தில் ஏற்பட்ட பள்ளத்தின் மீது வைத்து பக்கவாட்டாக சுற்றி 5 நிமிடம் மசாஜ் செய்யுங்கள். ஒரு நாள் விட்டு ஒரு நாள் இப்படி செய்து வர... முகம் குளிர்ச்சியாகி, பள்ளம் விழுந்த இடம் நாளாவட்டத்தில் சமமாகிவிடும்.

* மூன்றாவது வழி... பசுமஞ்சள் கிழங்கு 1, வேப்பந்தளிர் கொஞ்சம் - இரண்டையும் விழுதாக அரைத்துக் கொள்ளுங்கள். இரவு தூங்கப் போகும்முன் முகத்தை கழுவி, இந்த விழுதை வடுக்களை மூடுவது போல் தடவுங்கள். 15 நிமிடம் கழித்து முகத்தை கழுவுங்கள்.

இதனால் வடுக்களால் ஏற்பட்ட கருமை மறைந்து தோல் மிருதுவாகும். அடுத்ததாக ஆவி பிடிப்பதும் வடுக்களையும், கரும்புள்ளிகளையும் போக்கும். ஆவி பிடிக்கும் போது தினமும் அதில் வேப்ப இலை, வெட்டி வேர், எலுமிச்சம்பழ சாறு, துளசி இலை ஆகியவற்றில் தினமும் ஏதாவது ஒன்றை போட்டுக் கொள்ள வேண்டும்.

ஆவி பிடித்து முடிந்ததும் ஐஸ் பேக் வைக்க வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் பருக்களால் ஏற்படும் வடுக்களை போக்கலாம்.

0 comments:

Post a Comment