முதலிரவு எல்லா பெண்களுக்கும் சுவையான அனுபவமாக அமைந்துவிடுவதில்லை. சிலருக்கு சூடுபட்ட அவஸ்தையை தோற்றுவித்துவிடுகிறது. முதலிரவு என்பது பெண்களுக்கு வலியும் வேதனையும் தரக்கூடியது என்ற சிந்தனை பெண்கள் மனதில் ஆழமாக பதிந்துவிட்டது.
இதுபோல பல பெண்கள் வேண்டாத விஷயங்களை மனதுக்குள் போட்டு குழப்பி முதலிரவை கண்டு பயப்படுகிறார்கள். அந்த பயமே, அவர்களது புதிய வாழ்க்கையில் தேவையற்ற பிரச்சினைகளை உருவாக்கிவிடும். அதனால் மகளை திருமணத்திற்கு தயார் செய்யும் பெற்றோர், முதலில் அவளது மனநிலை எப்படி இருக்கிறது என்பதை கணிக்கவேண்டும்.
அதில் அஜாக்கிரதையுடன் நடந்துகொண்டால் அதுவே அவளது குடும்ப வாழ்க்கையை புதைகுழிக்குள் தள்ளிவிடும். திருமணத்துக்கு முன்பு ஏதோ ஒரு அசம்பாவிதம் நடந்து விட்டாலும் அதை மனதில் இருந்து தூக்கிப் போட்டு விட்டு இனி வரும் வாழ்க்கையை நேர்மையாக வாழும் மனப்பக்குவத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.
தவறுகள் யாரும் தெரிந்து செய்வதில்லை. அதை தாண்டி வர பழகிக்கொள்ள வேண்டும். தான் ஒரு நேர்மையான நல்ல மனைவி என்று பெயரெடுக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் முதலிரவில் வேண்டாத விஷயங்களை கணவரிடம் சொல்வது தவிர்க்கப்பட வேண்டும்.
ஒருவேளை அது கடைசிகாலம் வரை தீர்க்க முடியாத சிக்கலை உருவாக்கிவிடும். கடந்த கால கசப்பான அனுபவங்கள், நிகழ்காலத்தையும், வருங்காலத்தையும் வாட்டி வதைத்து கசப்பாக்கி விட அனுமதித்துவிடக் பெண்கள் மனதளவில் நன்றாக தயாராகி, முந்தைய தவறுகள், குழப்பங்கள், பிரச்சினைகளில் இருந்து விடுபட்டு தெளிவான சிந்தனையோடு, உறுதியான ஒழுக்கத்தோடு வாழ்க்கையில் அடியெடுத்துவைக்கவேண்டும்.
அவ்வாறு செய்தால் முதலிரவும் இனிக்கும். முழு வாழ்க்கையும் இனிக்கும்.
0 comments:
Post a Comment