சீனியர் நடிகைகள் இளம் நடிகைகளுக்கு காதலிக்க வேண்டாம் என்று அட்வைஸ் செய்கின்றனர். ஹீரோயின்கள் எளிதில் காதல் வலையில் சிக்கிவிடுகின்றனர். சில காதல் கைகூடினாலும் பெரும்பாலான காதல்கள் முறிந்துவிடுகிறது.
இந்நிலையில் இளம் நடிகைகளுடன் அக்கா, அம்மா வேடங்களில் நடிக்கும் சீனியர் நடிகைகள் சந்தர்ப்பம் வாய்க்கும்போது மனம்விட்டு பேசுகின்றனர். கும்கி, பாண்டியநாடு உள்ளிட்ட பல படங்களில் நடித்திருப்பவர் லட்சுமி மேனன்.
தற்போது ஜிகர்தண்டா படத்தில் சித்தார்த் ஜோடியாக நடிக்கிறார். இப்படத்தில் லட்சுமி மேனனின் அம்மாவாக அம்பிகா நடிக்கிறார்.
இதில் இருவருக்கும் நெருக்கமான நட்பு மலர்ந்தது. அவ்வப்போது லட்சுமிமேனனிடம், இதுதான் சினிமாவில் நீ சம்பாதிக்க வேண்டிய தருணம். இந்த நேரத்தில் காதலில் சிக்கிக்கொள்ளாதே என்று அறிவுரை கூறி உள்ளாராம்.
காதல் கிசுகிசுவில் லட்சுமிமேனன் இதுவரை சிக்கியதில்லை என்றாலும் குடும்ப பாங்கான நடிகை என்ற இமேஜை மாற்றி வருகிறாராம். விஷால் ஜோடியாக நான் சிகப்பு மனிதன் படத்தில் கூடுதல் கவர்ச்சிகாட்டி நடித்திருப்பதுடன் லிப் டு லிப் காட்சியிலும் நடித்திருக்கிறார்.
இப்படம் வெளியானபிறகு தன்னுடைய இமேஜே மாறிவிடும் என்று லட்சுமி கூறி வருகிறாராம்.
0 comments:
Post a Comment